பக்கம் எண் :

1072திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1209. மலைமகண் மறுகிட மதகரியைக்
கொலைமல்க வுரிசெய்த குழகனகர்
அலைமல்கு மரிசிலி னதனயலே
சிலைமல்கு மதிளணி சிவபுரமே. 3

1210. மண்புன லனலொடு மாருதமும்
விண்புனை மருவிய விகிர்தனகர்
பண்புனை குரல்வழி வண்டுகிண்டிச்
செண்பக மலர்பொழிற் சிவபுரமே. 4

1211. வீறுநன் குடையவள் மேனிபாகம்
கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்

__________________________________________________

என்கின்றது. அடல் - வலிமை. பொன்றிட - அழிய. எயிறு - கொம்பு வெண்பன்றி - திருமாலாகிய சுவேதவராகம். இது இத்தலவரவாற்றுக்குறிப்பை அருளியது.

3. பொ-ரை: மலைமகளாகிய பார்வதி தேவி அஞ்சுமாறு மதம் பொருந்திய யானையைக் கொன்று, அதன் தோலை உரித்துப் போர்த்த குழகனது நகர், அலைகள் நிரம்பிய அரிசிலாற்றின் கரையருகே விளங்குவதும் மலை போன்ற மதில்களை உடையதுமான சிவபுரமாகும்.

கு-ரை: மலைமகள் அஞ்ச யானையையுரித்த இறைவன் நகர் இது என்கின்றது. மறுகிட - கலங்க. உரிசெய்த - உரித்த. குழகன் - இளமையையுடையவன். சிலை மல்கும் - மலைபோல விளங்கும்.

4. பொ-ரை: மண், புனல், அனல், காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களாய்ப் பொருந்தி விளங்கும் விகிர்தனது நகர், பண் பொருந்திய குரலோடு வண்டுகள் சூழ்ந்து கிளர மலரும் செண்பகப் பூக்களோடு கூடிய பொழில்கள் சூழ்ந்து சிவபுரமாகும்.

கு-ரை: ஐம்பூதமுமாகிய விகிர்தனகர் இதுவாம் என்கின்றது. மாருதம் - காற்று. பண்புனை குரல் - பண்ணைச்செய்கின்ற குரல்.

5. பொ-ரை: அழகால் தனிப் பெருமை பெற்ற உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு பாகமாக உடையவனாகிய சிவ பிரானது