நாறுநன் குரவிரி வண்டுகிண்டித்
தேறலுண் டெழுதரு சிவபுரமே. 5
1212. மாறெதிர் வருதிரி புரமெரித்து
நீறது வாக்கிய நிமலனகர்
நாறுடை நடுபவ ருழவரொடும்
சேறுடை வயலணி சிவபுரமே. 6
1213. ஆவிலைந் தமர்ந்தவ னரிவையொடு
மேவிநன் கிருந்ததொர் வியனகர்தான்
பூவில்வண் டமர்தரு பொய்கையன்னச்
சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே. 7
__________________________________________________
குளிர்ந்த நகரம், மணம் வீசும் நல்ல
குராமலரை வண்டுகள் கிண்டித் தேனை உண்டு மகிழ்ந்து
எழும் பொழில் சூழ்ந்த சிவபுரமாகும்.
கு-ரை: உமாதேவியை ஒருபாகங்கொண்டவன்
நகர் இதுவாம் என்கின்றது. வீறு - தனிப்பெருமை. நாறு
நல்குரவிரி - மணம் வீசுகின்ற நல்லகுராமலர்; விரி
- மலர்; முதனிலைத் தொழிலாகு பெயர். தேறல் - தேன்.
6. பொ-ரை: பகைமை உணர்வோடு மாறுபட்டுத்
தன்னை எதிர்த்துவந்த அசுரர்களின் திரிபுரங்களை
எரித்து நீறாக்கிய நிமலனது நகர், உழவர்களோடு நாற்றுநடும்
மகளிர் பலரைக் கொண்ட சேற்று வளம் மிக்க வயல்களால்
அழகு பெறுவதாகிய சிவபுரமாகும்.
கு-ரை: திரிபுரங்களை நீறாக்கிய நிமலன்
நகர் இதுவாம் என்கின்றது. மாறு - பகையாக. நாறு - நாற்று.
7. பொ-ரை: பசுவிடம் உண்டாகும்
பால், தயிர் முதலிய ஐந்து பொருள்களை
விரும்புபவனாகிய சிவபிரான் உமையம்மையோடு கூடி மகிழ்வுடன்
இருக்கின்ற பெரிய நகர், தேனுண்ண வண்டுகள்
மொய்க்கும் மலர்களை உடைய பொய்கைகளில் அன்னச்
சேவல் தன் பெண் அன்னத்தைத் தழுவி மகிழும் அழகுடைய
சிவபுரமாகும்.
கு-ரை: ஆனைந்தாடும் பரமன் அம்மையோடும்
எழுந்தருளி
|