பக்கம் எண் :

1076திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


113. திருவல்லம்

பதிக வரலாறு:

திருமாற்பேறு உடையவர்தம் திருவருள் பெற்றுத் திருவல்லத்தையடைந்த சிவஞானச் செம்மலார், அங்குள்ள பெருமானுக்கு "எரித்தவன் முப்புரம்" என்னும் திருப்பதிகப் பெரும் பிணையலை அணிவித்தார்.

பண் : வியாழக்குறிஞ்சி

பதிக எண்: 113

திருச்சிற்றம்பலம்

1218. எரித்தவன் முப்புர மெரியின்மூழ்கத்
தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவ னுறைவிடந்திருவல்லமே. 1

1219. தாயவ னுலகுக்குத் தன்னொப்பிலாத்
தூயவன் றூமதி சூடியெல்லாம்
ஆயவ னமரர்க்கு முனிவர்கட்கும்
சேயவ னுறைவிடந் திருவல்லமே. 2

__________________________________________________

1. பொ-ரை: அவுணர்களின் முப்புரங்களையும் எரியில் மூழ்குமாறு செய்து அழித்தவனும், தாழ்ந்து தொங்கும் சடைமுடிமீது கங்கையைத் தரித்தவனும், வேதங்களை அருளிச் செய்தவனும், அவற்றின் பொருள்களை ஆறு அங்கங்களுடன் தெளியச் செய்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் திருவல்லமாகும்.

கு-ரை: முப்புரம் எரித்தவன். சடையிற் கங்கையைத் தரித்தவன். வேதங்களை விரித்தவன். வேறு வேறு தெரித்தவன் இடம் திருவல்லம் என்கின்றது. விரித்தவன் - பரப்பியவன். தெரித்தவன் - பொருளுணர்த்தியவன்.

2. பொ-ரை: உலக உயிர்கட்குத் தாய் போன்றவனும், தனக்கு யாரையும் உவமை சொல்ல முடியாத தூயவனும், தூய மதியை முடியில் சூடியவனும், எல்லாப் பொருள்களுமாக ஆனவனும், போகிகள்