1220. பார்த்தவன் காமனைப் பண்பழியப்
போர்த்தவன் போதகத் தின்னுரிவை
ஆர்த்தவன் நான்முகன் றலையையன்று
சேர்த்தவ னுறைவிடந் திருவல்லமே. 3
1221. கொய்தவம் மலரடி கூடுவார்தம்
மைதவழ் திருமகள் வணங்கவைத்துப்
பெய்தவன் பெருமழை யுலகமுய்யச்
செய்தவ னுறைவிடந் திருவல்லமே. 4
__________________________________________________
ஆன அமரர், மானசீலரான முனிவர் முதலானோர்க்குச்
சேயவனும் ஆன சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.
கு-ரை: உலகுக்குத் தாயானவன், ஒப்பில்லாத்
தூயவன், தேவர்கட்கும் முனிவர்கட்கும் சேயவன் திருத்தலம்
திருவல்லம் என்கின்றது. அமரர் முனிவர் இருவரும்
போகிகளாயும், மனனசீலர்களாயும் இருத்தலின் அவர்களுக்குச்
சேயவனானான் என்று அருளினர். இவர்களுக்குச் சேயவன்
எனவே ஞானிகட்கு மிக அண்ணியன் என்பதாம்.
3. பொ-ரை: மன்மதனின் அழகு கெடுமாறு
நெற்றி விழியால் பார்த்து அவனை எரித்தவனும்,
யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும், தன்முனைப்போடு
ஆரவாரித்த பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக்
கொய்து அத்தலையினது ஓட்டைக் கையில் உண்கலன்
ஆகச் சேர்த்துள்ளவனும் ஆகிய சிவபிரானது உறைவிடம்
திருவல்லமாகும்.
கு-ரை: காமனை யெரித்தவன். யானையையுரித்தவன்.
பிரமனைச் சிரங்கொய்தவன் இடம் இது என்கின்றது.
பண்பு - அழகு. போதகம் - யானைக்கன்று.
உரிவை - தோல். ஆர்த்தவன் - ஆரவாரம் செய்த பிரமன்.
4. பொ-ரை: அன்பர்களால் கொய்து அணியப்பெற்ற
அழகிய மலர் பொருந்திய திருவடிகளைச் சேர்பவர்களைப்
பலரிடத்தும் மாறி மாறிச் செல்லும் இயல்பினளாகிய
திருமகளை வணங்குமாறு செய்விப்பவனும், பெருமழை பெய்வித்து
உலகை உய்யுமாறு செய்பவனுமாய சிவபிரானது உறைவிடம்
திருவல்லமாகும்.
|