பக்கம் எண் :

 114. திருமாற்பேறு1079


* * * * * * * * * * * * * * * * * 7

1224. இகழ்ந்தரு வரையினை யெடுக்கலுற்றாங்
ககழ்ந்தவல் லரக்கனை யடர்த்தபாதம்
நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே
திகழ்ந்தவ னுறைவிடந்திருவல்லமே. 8

1225. பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய
அரியவ னருமறை யங்கமானான்
கரியவ னான்முகன் காணவொண்ணாத்
தெரியவன் வளநகர் திருவல்லமே. 9

_________________________________________________

கு-ரை: காலனை உதைத்தும், மார்க்கண்டர்க்கு உண்மைப் பொருளாய் எதிர்நின்றும், தக்கன் யாகத்தினைத் தகர்த்தும் நின்ற இறைவன் இடம் இது என்கின்றது. மாமுனி - மார்க்கண்டர். விதிர்த்து - நடுங்கி.

7. * * * * * * * * * * * *

8. பொ-ரை: இகழ்ந்து அரிய கயிலை மலையை எடுத்து அப்புறப்படுத்தற் பொருட்டு அகழ்ந்த வலிய இராவணனை அடர்த்த திருவடியை உடையவனும், அத்திருவடியையே நிகழ் பொருளாகக் கொண்ட அன்பர்கள் தேடிவருந்திய அளவில் அவர்கள் உள்ளத்திலேயே திகழ்ந்து விளங்குபவனும் ஆகிய சிவபிரான் உறையுமிடம் திருவல்லமாகும்.

பொ-ரை: இராவணன் வலியடக்கிய பாதத்தைத் தேடுவார் தேடச்செய்தே எமக்கு எளிமையாகத் திகழ்ந்தவன் நகர் இது என்கின்றது. இகழ்ந்து அருவரையினை - இது என் வலிக்கு எம் மாத்திரம் என்று இகழ்ந்து அரிய கயிலையை. நிகழ்ந்தவர் - பாதத்தை நிகழ்பொருளாகக் கண்டவர்கள். நேடுவார் - தேடுபவர்கள்.

9. பொ-ரை: எல்லோரினும் பெரியவனும், அறிவிற் சிறியவர்கள் சிந்தித்து உணர்தற்கு அரியவனும், அரிய வேதங்களும் அவற்றின் அங்கங்களும் ஆனவனும், திருமால் பிரமர்கள் காண ஒண்ணாதவனாய் அன்பிற் சிறந்தார்க்குத் தெரிய நிற்பவனும் ஆன சிவபிரானது வளநகர் திருவல்லமாகும்.