பக்கம் எண் :

1100திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1260. கற்றைச் சடையது கங்கண முன்கையிற்

றிங்கள்கங்கை

பற்றித்து முப்புரம் பார்படைத் தோன்றலை

சுட்டதுபண்

டெற்றித்துப் பாம்பை யணிந்தது கூற்றை

யெழில்விளங்கும்

வெற்றிச் சிலைமதில் வேணு புரத்தெங்கள்

வேதியரே. 2

1261. கூவிளங் கையது பேரி சடைமுடிக்

கூட்டத்தது

தூவிளங் கும்பொடிப் பூண்டது பூசிற்றுத்

துத்திநாகம்

__________________________________________________

பிரமபுரத்தவர் காட்டைப் பதியாகக் கொள்ளுவர்; அரவத்தை அணிவர்; அழகிய காதில் தோடு அணிவர்; காலில் சிலம்பணிவர்; வேடுருவந்தாங்கி விசயற்குப் பாசுபதாஸ்திரம் அளிப்பர் என்கின்றது. காடது பதி, அணிகலம் காரரவம், காலதனில் தூச்சிலம்பர், சுந்தரக் காதினில் தோடது அணிகுவர் எனப் பிரித்துக் கூட்டுக. பீடம் - மேடை.

2. பொ-ரை: கருங்கல்லால் அழகு விளங்குவதாய் அமைக்கப்பட்ட வெற்றித் திருமதில் சூழ விளங்கும் வேணுபுரத்துள் உறையும் எங்கள் வேதியராகிய இறைவர் கற்றையான சடையின்கண் திங்களையும் கங்கையையும் கொண்டவர். முன்கையில் பாம்பைக் கங்கணமாக அணிந்தவர். கையில் உலகைப் படைத்த பிரமனது தலையோட்டை உண்கலமாகப் பற்றிருப்பவர். முப்புரங்களைச் சுட்டெரித்தவர். முற்காலத்தில் மார்க்கண்டேயர் பொருட்டு எமனை உதைத்தவர். பாம்பை அணிகலனாகப் பூண்டவர்.

கு-ரை: வேணுபுரத்து வேதியரின் சடையது திங்களும் கங்கையும்; முன்கையிற் கங்கணமாக அணிந்தது பாம்பு; கையில் பற்றியது பிரமன் தலை; சுட்டது முப்புரம் என்கின்றது. பண்டு கூற்றை எற்றித்து என மொழிமாற்றிக் காண்க. பற்றித்து எற்றிற்று என்பன பற்றிற்று எற்றிற்று என்பதன் மரூஉ. எற்றித்து - உதைத்து.

3. பொ-ரை: இனிய பூக்களை உடைய இளஞ்சோலைகளால் சூழப்பட்ட புகலியுள் மேவிய புண்ணியராகிய இறைவர், அடர்த்தி