ஏவிளங் குந்நுத லாளையும் பாக
முரித்தனரின்
பூவிளஞ் சோலைப் புகலியுண் மேவிய
புண்ணியரே. 3
1262. உரித்தது பாம்பைஎயுடன்மிசை யிட்டதோ
ரொண்களிற்றை
எரித்ததொ ராமையை யின்புறப் பூண்டது
முப்புரத்தைச்
செருத்தது சூலத்தை யேந்திற்றுத் தக்கனை
வேள்விபன்னூல்
விரித்தவர் வாழ்தரு வெங்குரு வில்வீற்
றிருந்தவரே. 4
__________________________________________________
யான
சடைமுடியில் வில்வம் அணிந்தவர். கையில் பேரி
என்னும் தோற் பறையை உடையவர். தூய்மையோடு
விளங்கும் திருநீற்றுப் பொடியைப் பூசியவர். படப்
பொறிகளோடு கூடிய நாகத்தைப் பூண்டவர்.
அம்பொடுகூடிய நாகத்தைப் பூண்டவர். அம்பொடு கூடிய
வில் போன்று வளைந்தநெற்றியை உடைய உமையம்மையை
ஒரு பாகத்தே கொண்டவர். ஆனையை உரித்தவர்.
கு-ரை: கூவிளம் சடைமுடிக் கூட்டத்தது;
பேரி கையது; தூவிளங்கும் பொடி பூசிற்று;
துத்திநாகம் பூண்டது என மொழிமாற்றிப் பொருள்
கொள்க. கூவிளம் - வில்வம். பேரி - உடுக்கை. தூ -
தூய்மை. பொடி - விபூதி. துத்தி - படப்பொறி.
ஏவிளங்குநுதல் - வில்போல் விளங்கும்
நெற்றியையுடையாள் என்றது உமாதேவியை. ஏ என்றது
ஆகுபெயராக வில்லை உணர்த்திற்று. உரித்தனர் -
தோலைத் தனியாக உரித்துப் பூண்டனர். புகலி -
சீகாழி.
4. பொ-ரை: பல நூல்களைக்
கற்றுணர்ந்து விரித்துரைக்கும் புலவர்கள் வாழும்
வெங்குருவில் வீற்றிருக்கும் இறைவர் ஒப்பற்ற
சிறந்த களிற்றை உரித்தவர். பாம்பைத் தம்
திருமேனிமேல் அணிந்தவர். முப்புரங்களை
எரித்தவர்.ஆமையோட்டை மகிழ்வுறப் பூண்டவர்.
தக்கனை வேள்வியில் வெகுண்டவர். சூலத்தைக்
கையில் ஏந்தியவர்.
கு-ரை: பாம்பை உடல் மிசையிட்டது;
ஓர் ஒண் களிற்றை
|