1263. கொட்டுவ ரக்கரை யார்ப்பது தக்கை
குறுந்தாளன
விட்டுவர் பூதங் கலப்பில ரின்புக
ழென்புலவின்
மட்டுவ ருந்தழல் சூடுவர் மத்தமு
மேந்துவர்வான்
தொட்டுவ ருங்கொடித் தோணி புரத்துறை
சுந்தரரே. 5
1264. சாத்துவர் பாசந் தடக்கையி லேந்துவர்
கோவணந்தங்
கூத்தவர் கச்சுக் குலவிநின் றாடுவர்
கொக்கிறகும்
__________________________________________________
உரித்து; ஆமையை இன்புறப் பூண்டது;
முப்புரத்தை எரித்தது; சூலத்தை ஏந்திற்று; தக்கனை
வேள்வி செருத்தது எனக்கூட்டுக. களிறு - யானை.
செருத்தது - வருத்தியது. பன்னூல்விரித்தவர் - பல
நூல்களையும் விரித்துணர்ந்த அந்தணர்.
5. பொ-ரை: வானைத் தொடுமாறு
உயர்ந்துள்ள கொடிகளைக் கொண்ட தோணிபுரச்
சுந்தரராகிய இறைவர் தக்கை என்னும்
வாத்தியத்தைக் கொட்டுபவர். இடையிலே சங்கு
மணிகளைக் கட்டியவர். குறுகிய தாளை உடைய
பூதகணங்களைக் கலத்தல் இல்லாதவர். இனிய புகழை
ஈட்டுபவர். எலும்பையும், உலவுகின்ற இனிய தேன்மணம்
வெளிப்படும் ஊமத்தம் பூவையும் சூடுபவர். தீயை
ஏந்துபவர். ஈட்டுவர் - இட்டுவர் என எதுகை
நோக்கிக் குறுகிற்று.
கு-ரை: வான்தொட்டு வருங் கொடித்
தோணி புரத்துறை சுந்தரர் மத்தம் சூடுவர்; அக்கு
அரையார்ப்பது; தக்கை கொட்டுவர்; குறுத்தாளன பூதம்
இன்புகழ் விட்டுவர். என்பு கலப்பிலர்;
உலவின்மட்டு வருந்தழல் ஏந்துவர் எனக்கூட்டிப்
பொருள்காண்க. அக்கு - சங்கு மணி. தக்கை - ஒரு
வாத்தியம். உலவின் மட்டு வருந்தழல் -
உலகத்தையழிக்குமளவு வரும் காலாக்கினி.
6. பொ-ரை: தவமுனிவர்கள்
பூக்களைத் தூவி, கைகளால் தொழும் பூந்தராய் என்ற
தலத்தில் எழுந்தருளிய புண்ணிய வடிவினர், கோவணம்
உடுத்தவர். நீண்ட கையில் பாசத்தை ஏந்தியவர்.
தமக்கே
|