பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர்
பேரெழிலார்
பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய
புண்ணியரே. 6
1265. காலது கங்கை கற்றைச் சடையுள்ளாற்
கழல்சிலம்பு
மாலது வேந்தன் மழுவது பாகம்
வளர்கொழுங்கோட்
டாலது வூர்வ ரடலேற் றிருப்ப
ரணிமணிநீர்ச்
சேலது கண்ணியொர் பங்கர் சிரபுர
மேயவரே. 7
_________________________________________________
உரித்தான கூத்தினை உடையவர்.
கச்சணிந்து ஆடுபவர். கொக்கிறகு சூடுபவர்.
பல்வகைப் படைகளாகிய பேய்க் கணங்களை அடி
பெயர்த்து ஆடல் செய்தவர். மிக்க அழகுடையவர்.
கு-ரை: தவர் பூகைதொழு பூந்தராய்
மேவிய புண்ணியர் பாசம் தடக்கையில் ஏந்துவர்;
கோவணம் சாத்துவர்; தம்கூத்தவர்; கச்சு குலவி
நின்று ஆடுவர்; கொக்கிறகும் சூடுவர்; பல்படைபேய்
பேர்த்தவர்; பேர் எழிலார் எனக்கூட்டுக. கச்சு
குலவி நின்று ஆடுவர் - அரையில் கச்சு விளங்க
நின்றாடுவர். குலவி: குலவ எனத்திரிக்க.
பேர்த்தவர் - அடி பெயர்த்தாடல் செய்தவர்.
7. பொ-ரை: அழகிய நீலமணியின்
நிறத்தையும் சேல்மீன் போன்ற பிறழ்ச்சியையும்
கொண்டகண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக்
கொண்டவரும் சிரபுரத்தில் எழுந்தருளியவரும் ஆகிய
சிவபிரான், கழலையும் சிலம்பையும் காலில்
சூடியவர். கற்றைச் சடையில் கங்கையை உடையவர்.
திருமாலைப் பாகமாக் கொண்டவர். மழுவை
ஏந்தியவர். கொழுமையான கிளைகளைக் கொண்ட
ஆலமரத்தின் கீழ் இருப்பவர். அடல் ஏற்றினை
ஊர்பவர்.
கு-ரை: அணிமணி நீர்ச் சேலது கண்ணி
ஓர் பங்கர் சிரபுரம் மேயவர் காலது கழல் சிலம்பு,
கற்றைச்சடை உள்ளால் கங்கை, மாலது பாகம்,
ஏந்தல் மழுவது, வளர் கொழுங் கோட்டு ஆலது இருப்பர்,
|