பக்கம் எண் :

1104திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1266. நெருப்புரு வெள்விடை மேனிய ரேறுவர்

நெற்றியின்கண்

மருப்புறு வன்கண்ணர் தாதையைக் காட்டுவர்

மாமுருகன்

விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை யார்விறன்

மாதவர்வாழ்

பொருப்புறு மாளிகைத் தென்புற வத்தணி

புண்ணியரே. 8

1267. இலங்கைத் தலைவனை யேந்திற் றிறுத்த

திரலையின்னாள்

கலங்கிய கூற்றுயிர் பெற்றது மாணி

குமைபெற்றது

__________________________________________________அடல் ஏறு ஊர்வர் என மொழிமாற்றுக. கோடு - மேருமலைத் தென் சிகரம். ஆலது, சேலது, என்பனவற்றுள் அது பகுதிப்பொருள் விகுதி.

8. பொ-ரை: வீரர்களாகிய மிக்க தவத்தினை உடைய தவமுனிவர்கள் வாழ்வதும் மலை போன்ற மாளிகைகளை உடையது மான அழகிய புறவ நகருக்கு அணிசேர்க்கும் புண்ணியராகிய இறைவர் நெருப்புப் போலச் சிவந்த மேனியை உடையவர். வெண்மையான விடைமீது ஏறி வருபவர். நெற்றியின் கண், விழி உடையவர். தந்தத்தை உடையவராகிய விநாயகருக்குத் தந்தையாராவார். பாம்புக்குத் தம் மெய்யில் இடம் தந்து அதனைச் சூடுபவர். சிறப்புக் குரிய முருகனுக்கு உகப்பான தந்தையார் ஆவார்.

கு-ரை: விறல் மாதவர் வாழ் பொருப்புறு மாளிகைத் தென் புறவத்து அணி புண்ணியர், நெருப்புரு மேனியர், வெள்விடை ஏறுவர், நெற்றியின் கண்ணர், மருப்புருவன் தாதை மா முருகன் விருப்புறு தந்தையார், பாம்புக்கு மெய்(யைக்) காட்டுவர் எனக் கூட்டுக. மருப்பு உருவன் - கொம்பினையுடைய விநாயகப்பெருமான், தாதையை என்பதிலுள்ள ஐகாரத்தைப் பிரித்து மெய் என்பதனோடு கூட்டி மெய்யை எனப் பொருள் கொள்க. இது உருபுபிரித்துக் கூட்டல்.

9. பொ-ரை: நீர் நிறைந்து விளங்கும் வயல்களை உடைய சண்பைப் பதியில் எழுந்தருளிய இறைவர் இலங்கைத் தலைவனாகிய இராவணனை நெரித்தவர். மானைக் கையில் ஏந்தியவர். கலக்கத்