பக்கம் எண் :

 117. திருப்பிரமபுரம்1105


கலங்கிளர் மொந்தையி னாடுவர் கொட்டுவர்

காட்டகத்துச்

சலங்கிளர் வாழ்வயற் சண்பையுண் மேவிய

தத்துவரே. 9

1268. அடியிணை கண்டிலன் றாமரை யோன்மான்

முடிகண்டிலன்

கொடியணி யும்புலி யேறுகந் தேறுவர்

தோலுடுப்பர்

பிடியணி யுந்நடை யாள்வெற் பிருப்பதோர்

கூறுடையர்

கடியணி யும்பொழிற் காழியுண் மேய

கறைக்கண்டரே. 10

__________________________________________________

தோடு வந்த கூற்றுவனைக் குமைத்தவர். வாழ்நாள் முடிவுற்ற மார்க்கண்டேயருக்கு உயிர்கொடுத்துப் புது வாழ்வருளியவர். வாத்தியமாக இலங்கும் மொந்தை என்ற தோற்கருவியைக் கொட்டுபவர். இடு காட்டின்கண் ஆடுபவர்.

கு-ரை: சலம் கிளர் வாழ் வயல் சண்பையில் மேவிய தத்துவர் இலங்கைத் தலைவனை இறுத்தது; இரலைர ஏந்திற்று; கலங்கிய கூற்று குமை பெற்றது; இல் நாள் மாணி உயிர்பெற்றது; கலங்கிளர் மொந்தை யின் கொட்டுவர்; காட்டகத்து ஆடுவர் எனக்கூட்டுக. இரலை - மான். இல் நாள் மாணி - வாழ்நாள் உலந்த மார்க்கண்டன், குமை பெற்றது - அளிந்தழிந்தது.

10. பொ-ரை: மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த சீகாழிப்பதியுள் விளங்கும் கறைக் கண்டராகிய சிவபெருமானின் அடி இணைகளைத் திருமால் கண்டிலன். தாமரைமலரில் எழுந்தருளியுள்ள பிரமன்முடியைக் கண்டிலன். அவ்விறைவன் கொடிமிசை இலச்சினையாகவுள்ள ஏற்றினை உகந்து ஏறுவர். புலித்தோலை உடுத்தவர். பிடி போன்ற அழகிய நடையினை உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவர். அவர் இருப்பதோ கயிலை மலையாகும்.

கு-ரை: கடி அணியும் பொழில் காழியுள் மேய கறைக் கண்டர் அடியினை மால் கண்டிலன்; தாமரையோன் முடி கண்டிலன்; கொடி