1269. கையது வெண்குழை காதது சூல
மமணர் புத்தர்
எய்துவர் தம்மை யடியவ ரெய்தாரொ
ரேனக்கொம்பு
மெய்திகழ் கோவணம் பூண்ப துடுப்பது
மேதகைய
கொய்தலர் பூம்பொழிற் கொச்சையுண் மேவிய
கொற்றவரே. 11
1270. கல்லுயர் கழுமல விஞ்சியுண் மேவிய
கடவுடன்னை
நல்லுரை ஞானசம் பந்தன்ஞா னத்தமிழ்
நன்குணரச்
__________________________________________________
யணியும் ஏறு உகந்து ஏறுவர்; புலித்தோல்
உடுப்பர்; பிடியணியும் நடையாள் கூறுடையர்; வெற்பு
இருப்பது எனக் கூட்டுக, கடி - மணம். கொடியணியும் -
கொடியை யலங்கரிக்கும், பிடி அணியும் நடையாள் -
பெண் யானையை யொத்த நடையினையுடைய பார்வதி.
வெற்பு - கைலை.
11. பொ-ரை: சிறந்தனவாய்க்
கொய்யக் கொய்ய மலர்வனவாய அழகிய பொழில்கள்
சூழ்ந்த சொச்சையுள் எழுந்தருளிய கொற்ற வராகிய
சிவபிரான் கையில் சூலமும் காதில் வெண்குழையும்
கொண்டவர். அப்பெருமானை அமணர் புத்தர் எய்தார்.
அடியவர் எய்துவர். பன்றியின் கொம்பை அவர்
திருமேனிமேல் விளங்கப் பூண்பவர், கோவணம்
உடுத்தவர்.
கு-ரை: கொய்து அலர் பூம்பொழில்
மேதகைய கொச்சையுள் மேவிய கொற்றவர் கையது
சூலம்: காதது வெண்குழை; அமணர் புத்தர் தம்மை
எய்தார். அடியவர் எய்துவர்; ஓர் ஏனக்கொம்பு
மெய்திகழ் பூண்பது; கோவணம் உடுப்பது எனக்கூட்டுக.
12. பொ-ரை: உயர்ந்த மதில்களை
உடைய கழுமலக் கோயிலுள் விளங்கும் கடவுளை
நல்லுரைகளால் ஞானசம்பந்தன் பாடிய ஞானத்தமிழை
நன்குணர்ந்து சொல்லவும் கேட்கவும் வல்லவர்
பழமையான தேவர்களோடும் அமருலகம் சென்று
சிவலோகத்தைப் பெறுவர்.
|