திருத்தொண்டர் புராண சாரம்
காழிநகர்ச் சிவபாத விதயர் தந்த
கவுணியர்கோன் அழுதுமையாள் கருதி யூட்டும்
ஏழிசையி னமுதுண்டு தாளம் வாங்கி
இலங்கியநித் திலச்சிவிகை யிசைய ஏறி
வாழுமுய லகன் அகற்றிப் பந்தரேய்ந்து
வளர்கிழிபெற்று அரவின்விட மருகல் தீர்த்து
வீழிநகர்க் காசெய்தி மறைக்கதவம் பிணித்து
மீனவன்மே னியின்வெப்பு விடுவித் தாரே.
ஆரெரியிட்டு எடுத்தவே டவைமுன் னேற்றி
ஆற்றிலிடும் ஏடெதிர்போ யணைய வேற்றி
ஓரமணர் ஓழியாமே கழுவி லேற்றி
ஓதுதிருப் பதிகத்தால் ஓட மேற்றிக்
காருதவும் இடிபுத்தன் றலையில் ஏற்றிக்
காயாத பனையின்முது கனிக ளேற்றி
ஈரமிலா அங்கமுயி ரெய்த வேற்றி
இலங்குபெரு மணத்தரனை யெய்தி னாரே.
- உமாபதி சிவாசாரியர்.
|