1284. எண்ணார்மும் மதிலெய்த விமையா முக்கண்
பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி
கண்ணார் நீ றணிமார்பன் கள்ளின் மேயான்
பெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே. 3
1285. பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும்
நறைபெற்ற விரிகொன்றைத் தார்ந யந்த
கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளின் மேயான்
நிறைபெற்ற வடியார்கள் நெஞ்சு ளானே. 4
1286. விரையாலு மலராலும் விழுமை குன்றா
உரையாலு மெதிர்கொள்ள வூரா ரம்மாக்
__________________________________________________
3. பொ-ரை: பகைவர்களாகிய
அசுரர்களின் மும்மதில்களை எய்து அழித்தவனும்,
இமையாத மூன்று கண்களை உடையவனும் இசையமைப்போடு
கூடிய நான்மறைகளைப் பாடி மகிழும் மேலான யோகியும்,
கண்களைக் கவரும் வண்ணம் திருநீறு அணிந்த
மார்பினனும், பெண் ஆண் என இருபாலாகக் கருதும்
உமைபாகனும் ஆகிய பெருமான், கள்ளில் என்னும்
இத்தலத்தில் எழுந்தருளியுள்ளான்.
கு-ரை: திரிபுரம் எரித்த
பரமயோகி கள்ளில் மேயவன்; அவனே பெண் ஆண்
ஆனான் என்கின்றது. எண்ணார் - பகைவர். கண் - அழகு.
பிஞ்ஞகன் - அழகிய சிவன் (தலைக்கோலமுடையவன்).
4. பொ-ரை: பிறை சூடிய சடையை உடைய
அண்ணலும், பெண்வண்டுகளோடு ஆண் வண்டுகள் கூடி
ஒலிக்கும் தேன் நிறைந்த விரிந்த கொன்றை
மாலையை விரும்பிச் சூடிய, விடக்கறை பொருந்திய
கண்டத்தை உடையவனும், மனநிறைவு பெற்ற
அடியவர்களின் நெஞ்சங்களில் நிறைந்து
நிற்பவனுமாகிய சிவபிரான், கள்ளில் என்னும்
இத்தலத்தே எழுந்தருளியுள்ளான்.
கு-ரை: கள்ளில் மேயான்
என்நெஞ்சுளான் என்கின்றது. ஆலும் - ஒலிக்கும். நறை
தேன். கறை - விடம் நிறைபெற்ற அடியார்கள் -
மனநிறைவுற்ற அடியார்கள்.
5. பொ-ரை: இடையில் வெண்ணிறமான
கோவணத்தை உடுத்த சிவபிரான் மணம் கமழும் ஐவகை
மணப் பொருள்களாலும் மலர்
|