பக்கம் எண் :

1118திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


கரையார்பொன் புனல்வேலிக் கள்ளின்மேயான்
அரையார்வெண் கோவணத்த வண்ணல் தானே. 5

1287. நலனாய பலிகொள்கை நம்பா னல்ல
வலனாய மழுவாளும் வேலும் வல்லான்
கலனாய தலையோட்டான் கள்ளின் மேயான்
மலனாய தீர்த்தெய்து மாதவத் தோர்க்கே. 6

1288. பொடியார்மெய் பூசினும் புறவி னறவம்
குடியாவூர் திரியினும் கூப்பிடினும்

__________________________________________________

களாலும் சீர்மை குன்றாத புகழுரைகளாலும் ஊர் மக்கள் எதிர்கொள்ள, அழகியவும் பெரியவுமான கரைகளை உடைய பொன்னி நதியின் கிளையாறு சூழ்ந்துள்ள கள்ளில் என்னும் இத்தலத்தே எழுந்தருளியுள்ளான்.

கு-ரை: கள்ளில் மேயான் மணப்பொருள்களாலும், மலராலும் தோத்திரப் பாக்களாலும் ஊரார் எதிர்கொள்ளும் அண்ணலாக இருக்கின்றான் என்கின்றது. விரை - மணம். எண்வகை விரைகள் சங்க இலக்கியங்களில் கூறப்பெற்றுள்ளன. விழுமை - பெருமை. உரை - புகழ்.

6. பொ-ரை: மக்கட்கு நன்மைகள் உண்டாகத் தான் பலியேற்கும் கொள்கையனாகிய நம்பனும், அழகிய வெற்றியைத் தரும் மழு வாள் வேல் ஆகியவற்றில் வல்லவனும், உண்கலனாகிய தலை யோட்டை உடையவனும் ஆகிய சிவபிரான், தன்னை எய்தும் மாதவத் தோர்க்கு மும்மலங்களைத் தீர்த்து அருள்பவனாய்க் கள்ளில் என்னும்இத்தலத்தில் எழுந்தருளியுள்ளான்.

கு-ரை: கள்ளில் மேயான் மாதவத்தோர்க்கு மூலமலத்தைத் தீர்த்து அவரைப் பொருந்துவன் என்கின்றது. நலன் ஆயபலி -இடு வார்க்கு நன்மையமைத்த பிச்சை. வலன் ஆய மழுவாளும் வேலும் வல்லான். வெற்றியைத் தருவதாய மழுமுதலிய படைகளைவல்லவன்.. மலன் ஆய தீர்த்து - மலங்களைப்போக்கி, தீர்த்து என்பது உபசார வழக்கு. வலியை வாட்டி என்பது கருத்து.

7. பொ-ரை: மணம் கமழும்அழகிய பொழில்களும் சோலைகளும் சூழ்ந்த கள்ளிலில் எழுந்தருளிய இறைவன் அடியவர்கள் திரு நீற்றுப் பொடியை உடலில் பூசினும், சோலைகளில் எடுத்த தேனை