கடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளின்மேயான்
அடியார்பண் பிகழ்வார்க ளாதர் களே. 7
1289. திருநீல மலரொண்கண் டேவி பாகம்
புரிநூலுந் திருநீறும் புல்கு மார்பில்
கருநீல மலர்விம்மு கள்ளி லென்றும்
பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே. 8
1290. வரியாய மலரானும் வையந் தன்னை
உரிதாய வளந்தானு முள்ளு தற்கங்
கரியானு மரிதாய கள்ளின் மேயான்
பெரியானென்றறிவார்கள் பேசு வாரே. 9
__________________________________________________
உண்டு திரியினும் பலவாறு
பிதற்றினும்அவர்கள் மனம் இறைவன் திருவருளிலேயே
அழுந்தியிருக்குமாதலின் அடியவர்களின் குணம்
செயல்களை இகழ்பவர்கள் அறியாதவர்களாவர்.
கு-ரை: கள்ளில் மேயான்
அடியார்கள் நீறணியினும், தேனைக் குடித்து
ஊர்திரியினும், கூப்பிடினும் அவர்களை
இகழ்வார்கள் கீழ் மக்கள் என்கின்றது.
‘எத்தொழிலைச் செய்தாலும், ஏதவத்தைப்
பட்டாலும் முத்தர் மனம் மோனத்தே’
இருக்குமாதலின் அவர்களை யிகழ்வார் ஆதர்
என்றவாறு.
8. பொ-ரை: அழகிய நீலமலர் போன்ற
ஒளி பொருந்திய கண்களை உடைய உமையம்மையை ஒரு
பாகமாகக் கொண்டு, முப்புரி நூலும் திருநீரும்
பொருந்திய மார்பினனாய் விளங்கும் கரிய மிடற்று
அண்ணலாகிய சிவபிரான் என்றும் விரும்புவது
கருநீலமலர்கள் மிகுந்து பூத்துள்ள கள்ளில் என்னும்
தலமாகும்.
கு-ரை: கள்ளிலே இறைவன் என்றும்
பேணுவது என்கின்றது. பேணுவது - விரும்புவது.
9. பொ-ரை: சிவந்த வரிகளைக்
கொண்ட தாமரை மலர்மேல் உறையும் பிரமனும்,
உலகங்களைத் தனக்கு உரியதாகுமாறு அளந்த
திருமாலும், நினைத்தற்கும் அரியவனாய் விளங்கும்
பெரியோனாகிய இறைவன், அரியதலமாய் விளங்கும்
கள்ளிலில் எழுந்தருளி உள்ளான். அறிந்தவர்கள்
அவனையே பெரியோன் எனப்போற்றிப் புகழ்வர்.
|