1305. மழைநுழை மதியமொ
டழிதலை மடமஞ்ஞை
கழைநுழை புனல்பெய்த
கமழ்சடை முடியன்
குழைநுழை திகழ்செவி
யழகொடு மிளிர்வதொர்
இழைநுழை புரியண
லிடமிடை மருதே. 2
1306. அருமைய னெளிமைய
னழல்விட மிடறினன்
கருமையி னொளிபெறு
கமழ்சடை முடியன்
பெருமையன் சிறுமையன்
பிணைபெணொ டொருமையின்
இருமையு முடையண
லிடமிடை மருதே. 3
__________________________________________________
2. பொ-ரை: மேகங்களிடையே நுழைந்து செல்லும் பிறை
மதியோடு தசை வற்றிய தலையோடு
ஆகியவற்றையும்,மடமயில்கள் மூங்கிலிடையே
நுழைந்து செல்லும் மலையில் தோன்றிய தேவ கங்கை
நதியையும்; கமழுமாறு சடைமுடியில் சூடியவனும், குழை
நுழைந்து விளங்கும் செவியழகோடு இழையாகத்
திரண்டமுப்புரிநூலை விரும்பி அணிபவனுமாகிய
அண்ணல் எழுந்தருளிய இடம் திரு விடைமருதூராகும்.
கு-ரை: மதியத்தையும் கபாலத்தையும்
கங்கையையும் தாங்கிய சடையன்; குழைக்காதோடு
விளங்கும் பூணுலையணிந்த அண்ணல் இடம்இது
என்கின்றது. மழை நுழை மதியம் - மேகத்தினூடே
நுழையும்பிறை. அழிதலை - தசைநார் அழிந்த
பிரமகபாலம், மடமஞ்ஞை கழை நுழை புனல் - இளைய
மயில்கள் மூங்கிலிடையே நுழைகின்ற தேவகங்கை.
இழை நுழைபுரிஅணல் - இழையாகத் திரண்ட முப்புரிநூலை
அணிந்த பெருமையிற் சிறந்தவன்.
3. பொ-ரை: அன்பில்லாதவர்க்கு
அரியவனும்,அன்புடை அடியவர்க்கு எளியவனும், அழலும்
தன்மையுடைய விடத்தை உண்டு
|