பக்கம் எண் :

 121. திருவிடைமருதூர்1129


1307. பொரிபடு முதுகுற

முளிகளி புடைபுல்கு

நரிவளர் சுடலையு

ணடமென நவில்வோன்

வரிவளர் குளிர்மதி

யொளிபெற மிளிர்வதொர்

எரிவளர் சடையண

லிடமிடை மருதே. 4

__________________________________________________

நிறுத்திய கண்டத்தினனும், பெரியனவற்றுக்கெல்லாம் பெரியவனும், சிறியன யாவற்றினும் சிறியவனும், தன்னோடு பிணைந்துள்ள உமையம்மையோடு ஒருருவில் இருவடிவாய்த் தோன்றுபவனுமாகிய சிவபிரானுக்குரிய இடம் திருவிடைமருதூர் ஆகும்.

கு-ரை: அரியனாக, எளியனாக, நீலகண்டனாக, சடைமுடியனாக, ஓருருவிலேயே சிவமும் சக்தியுமாகிய ஈருருவத் தையுடையவனாக இருக்கும் அண்ணல் இடம் இடைமருது என்கின்றது. அருமையன் - அணுகியடிவணங்காத புறச்சமயிகட்கும், ஆணவ பரிபாகமுறாத பதவிமோகமுடையார்க்கும் அரியன். எளிமையன் - அடியார்க்கு எளியன். பெருமையன் - பெரியவற்றிற்கு எல்லாம் பெரிய பெருமையுடையவன். சிறுமையன் - சிறுயவற்றிற்கெல்லாம் சிறியவன். பிணை பெண்ணொடு - பிணைந்துள்ள உமாதேவியோடு. ஒருமையின் - ஒரு திருமேனியிலேயே. இருமையும் உடைய - சிவமும் சத்தியுமாகிய இரண்டன் தன்மையும் உடைய.

4. பொ-ரை: நன்கு காய்ந்து பொரிந்த முதுகினை உடைய நரிகள் களிப்போடு அருகில் மிகுந்து தோன்ற, சுடலைக் காட்டில் நடம் நவில்பவனும், கோடாகத் தோன்றிப் பின்வளரும் குளிர்ந்த பிறைமதியை ஒளிபெற அணிந்த எரிபோன்று வளரும் சடைமுடியை உடையவனும் ஆகிய தலைமையாளனாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்.

கு-ரை: இடுகாட்டுள் நடமாடுவோன், மதி புனைந்த சடையண்ணல் இடம் இது என்கின்றது. பொரி படு முதுகு உற முளி களி புடை புல்கு நரி - பொரிந்த முதுகிற் பொருந்தக் காய்ந்த களிப்போடு கூடிய நரி, வரி - கோட்டு அளவாக. அதாவது கீற்றாக.