1310. வளமென வளர்வன
வரிமுரல் பறவைகள்
இளமண லணைகரை
யிசைசெயு மிடைமரு
துளமென நினைபவ
ரொலிகழ லிணையடி
குளமண லுறமூழ்கி
வழிபடல் குணமே. 7
__________________________________________________
மதிப்புடைய அணிகலன்கள் எவையும் இல்லாதவன்
என்னுமாறு என்பு முதலியன பூண்டு மழு இலைவடிவான சூலம் இவற்றைப்
படைக்கலனாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது இடம்
இடைமருதாகும்.
கு-ரை: உமாதேவியை இடப்பாகம்
உடையோன், மழு சூலம் இவற்றையுடையவன் இடம் இது
என்கின்றது. துகிலையும், அகில்புகை கமழ் குழலையும்
உடைய மடமகள் எனக் கூட்டுக.
விலையுடை அணிகலன் இலன் என -
விலைமதிப்புடைய உயர்ந்த ஆபரணங்கள் இல்லாதவன்
என. இலையுடை படையவன் - இலைவடிவாகிய சூலப்படையை
உடையவன்.
7. பொ-ரை: இது வளமான இடமாகும் என
வளர்வனவாகிய வரிப் பாடல்களைப் பாடும் வண்டுகள்
இளமணல் அணைந்த கரையில் தங்கி முரலும் இடைமருதை
மனமார நினைபவர் அந்நகரை அடைந்து ஆங்குள்ள
தீர்த்தத்தில் நன்கு மூழ்கி ஒலிக்கின்ற
கழலணிந்த மருத வாணனை வழிபடுதலைப் பண்பாகக்
கொள்க.
கு-ரை: வண்டுகள் இசைமுரலும்
இடைமருதுறைபவனிணையடியைக் குளத்தில் மூழ்கி
வரிபடல் குணமாம் என்கின்றது.
வளம் என வளர்வன - இது வளமானஇடம் என்று
வளர்வன வாகிய. வரி முரல் பறவைகள் - வரிகளோடு
ஒலிக்கின்ற வண்டுகள். மனம் நினைத்த பொருள்
வடிவாக அமையும் இயல்பிற்றாதலின் ‘இடைமருது உளமென
நினைபவர்’ என்றார். குளம் அணல் உற மூழ்கி -
குளத்தில் கழுத்தளவிருந்து மூழ்கி. அணல் - தாடி.
|