1313. துவருறு விரிதுகி
லுடையரு மமணரும்
அவருறு சிறுசொலை
நயவன்மி னிடுமணல்
கவருறு புனலிடை
மருதுகை தொழுதெழும்
அவருறு வினைகெட
லணுகுதல் குணமே. 10
1314. தடமலி புகலியர்
தமிழ்கெழு விரகினன்
இடமலி பொழிலிடை
மருதினை யிசைசெய்த
__________________________________________________
கு-ரை: திருமாலும் பிரமனும் மாறுபட
இன்னதென அறிய முடியா வடிவத்தோடு எழுந்த
பெருமானிடம் இது என்கின்றது. மருதிடை நடவிய
மணிவணர் - மருதமரங்களினிடையே கட்டிய உரலோடு
புகுந்த கண்ணன். இனது எனக் கருதிடல் அரியது - இன்னது
என்னக் கருதமுடியாத. எருது - இடபம்.
10. பொ-ரை: துவர் ஏற்றிய விரிந்த
ஆடையினை உடுத்தும் போர்த்தும் திரியும் புத்தரும்
சமணரும் கூறும் சிறு சொல்லை விரும்பாதீர். காவிரி
பல கிளைகளாகப் பிரிந்து செல்லும்
வாய்க்கால்களை உடைய இடைமருதைக் கைகளால்
தொழுபவர்க்கு வினைகள் கெடுதலும் நல்ல குணங்கள்
உண்டாதலும் கூடும்.
கு- ரை: புறச்சமயிகள் பேச்சை
விரும்பாதீர்கள், இடை மருதினைக் கைதொழும்;
அவர்களின் வினை கேட்டையணுகுதல் குணம்
என்கின்றது. துவர் உறு உடையர் - புத்தர்.
11. பொ-ரை: நீர்நிலைகள் பலவற்றை
உடைய புகலிப் பதியில் தோன்றியவனும், தமிழ்
விரகனுமாகிய ஞானசம்பந்தன் விரிந்த
பொழில்களால் சூழப்பட்ட இடைமருதீசனை இசையால்
பரவிய சொல்லோவியமாகிய இத்திருப்பதிகத்
தமிழைப் பாடிப் பரவ வல்லவர்தம் வினைகள்
கெட்டொழிய அவர்கள் புகழோடும் விளங்கும்
ஒளியோடும் திகழ்பவராவர்.
|