பக்கம் எண் :

1134திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


படமலி தமிழிவை

பரவவல் லவர்வினை

கெடமலி புகழொடு

கிளரொளி யினரே. 11

திருச்சிற்றம்பலம்

_________________________________________________

கு-ரை: தமிழ் விரகினனாய ஞானசம்பந்தப் பெருமான். இடைமருதைப் பற்றி இயம்பிய தமிழை வல்லவர் வினைகெடப் புகழொடு ஒளியுமிக விளங்குவர் என்கின்றது. படம் மலி தமிழ் - பட மெடுத்தாற்போலச் சிறந்த தமிழ். கிளர் - மிகுகின்ற.

திருஞானசம்பந்தர் புராணம்

ஓங்குதிருப் பதிகம்ஓ டேகலன் என்றெடுத்தருளித்
தாங்கரிய பெருமகிழ்ச்சி தலைசிறக்குந் தன்மையினால்
ஈங்கெனைஆ ளுடையபிரான் இடைமருதீ தோ என்று
பாங்குடைய இன்னிசையாற் பாடிஎழுந் தருளினார்.

அடியவர்கள் எதிர்கொள்ள எழுந்தருளி அங்கணைந்து
முடிவில்பரம் பொருளானார் முதற்கோயில் முன்இறைஞ்சிப்
படியில்வலங் கொண்டுதிரு முன்பெய்திப் பார்மீது
நெடிதுபணிந் தெழுந்தன்பு நிறைகண்ணீர் நிரந்திழிய.

பரவுறுசெந் தமிழ்ப்பதிகம் பாடிஅமர்ந் தப்பதியில்
விரவுவார் திருப்பதிகம் பலபாடி வெண்மதியோ(டு)
அரவுசடைக் கணிந்தவர்தந் தாள்போற்றி ஆர்வத்தால்
உரவுதிருத் தொண்டருடன் பணிந்தேத்தி உறையுநாள்.

- சேக்கிழார்.