பக்கம் எண் :

 122. திருவிடைமருதூர்1137


1319. உரையரு முருவின ருணர்வரு வகையினர்
அரைபொரு புலியத ளுடையின ரதன்மிசை
இரைமரு மரவின ரிடைமரு தெனவுளம்
உரைகள துடையவர் புகழ்மிக வுளதே. 5

1320. ஒழுகிய புனன்மதி யரவமொ டுறைதரும்
அழகிய முடியுடை யடிகள தறைகழல்
எழிலின ருறையிடை மருதினை மலர்கொடு
தொழுதல்செய் தெழுமவர்துயருற லிலரே. 6

1321. கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும்
நிலையினர் சலமக ளுலவிய சடையினர்

_________________________________________________

5. பொ-ரை: சொல்லுதற்கரிய அழகரும், உணர்வதற்கரிய தன்மையரும், இடையில் பொருந்திய புலித்தோல் ஆடையினரும் அதன்மேல் இரையை விழுங்கும் பாம்பைக் கச்சையாகக் கட்டியவரும் ஆகிய சிவபிரானது இடைமருதைப் பலகாலும் புகழ்ந்து போற்றுவார்க்கு மிகுதியான புகழ் உளதாகும்.

கு-ரை: சொல்லுதற்கரிய உருவினரும், உணர்தற்கரிய தன்மைகளை உடையவரும், புலித்தோலாடையினரும் ஆன இறைவனது இடைமருதென நினைக்கவும் பேசவும் வல்லவர்கட்குப் புகழ் மிக உளதாம் என்கின்றது. இரை மரும் அரவினர் - உணவை உட்கொள்ளும் பாம்பினையுடையவர். உளம் உடையவர், உரைகளது உடையவர்(க்குப்) புகழ் உளது என முடிக்க.

6. பொ-ரை: வழிந்தொழுகும் கங்கை நதி, இளம்பிறை, பாம்பு ஆகியன உறையும் அழகிய சடைமுடியை உடையவரும், ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்துள்ள அழகரும் ஆகிய அடிகளது இடைமருதை அடைந்து மலர் கொண்டு போற்றித் தொழுது எழுவார் துன்புறுதல் இலராவர்.

கு-ரை: இடைமருதை மலர்கொண்டு தொழுவார் துயருறுதல் இலர் என்கின்றது. அடிகளது இடைமருது, அறைகழல் எழிலினர் உறையிடைமருது எனத் தனித்தனி இயைக்க.

7. பொ-ரை: வீணையை மீட்டி இன்னிசைக் கலையை எழுப்பும் விரலை உடையவரும், கொடிய மழுவாயுதத்தோடு விளங்கும் நிலை