பக்கம் எண் :

1138திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


மலைமகண் முலையிணை மருவிய வடிவினர்
இலைமலி படையவ ரிடமிடை மருதே. 7

1322. செருவடை யிலவல செயல்செயத் திறலொடும்
அருவரை யினிலொரு பதுமுடி நெரிதர
இருவகை விரனிறி யவரிடை மருதது
பரவுவ ரருவினை யொருவுதல் பெரிதே. 8

1323. அரியொடு மலரவ னெனவிவ ரடிமுடி
தெரிவகை யரியவர் திருவடி தொழுதெழ

_________________________________________________

யினரும், கங்கை உலாவும் சடைமுடியினரும் மலைமகளின் முலைத்தழும்பு பொருந்திய வடிவினரும், இலைவடிவான சூலத்தை ஏந்திய வருமாய சிவபிரானார் இடம் இடைமருதாகும்.

கு-ரை: கங்கையுலாவிய சடையையும், உமாதேவியார் முலைத் தழும்பு சேர்ந்த வடிவினையும் உடையவர் இடம் இடைமருது என்கின்றது. வீணைவாயிலாக இசைக்கலையை வெளிப்படுத்துதலின் கலைமலி விரலினர் எனக் கூறப்பெற்றார்.

8. பொ-ரை: போரில் முறையற்ற செயல்களைச் செய்யும் இராவணன் தன்னிடமும் அவ்வாறு திறலோடும் செய்தலைக் கண்டு அரிய கயிலைமலையின்கீழ் அகப்படுத்தி அவனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு சினம் கருணை ஆகிய இருவகைக் குறிப்போடு கால் விரலை ஊன்றியவராகிய சிவபிரானது இடைமருதைப் பரவுவார் அருவினைகள் பெரிதும் நீங்கும்.

கு-ரை: இடைமருதைப் பரவுவார் வினை நீங்குதல் பெரிதாமோ என்கின்றது. செருவு அடையில வல செயல் செய் அத்திறலொடும் - போரில் முறையற்ற வலிய செயல்களைச் செய்யும் அத்தகைய வலிமையோடும். இருவகை விரல் நிறியவர் - அவன் வலிமையும் முடியும் ஆகிய இரண்டும் நெரியும்படியான இருவகைத் திருவுள்ளக்குறிப்போடு விரலை ஊன்றியவர். அதாவது அவன் அழியப்படாது அடங்கவேண்டும் என்ற திருவுள்ளக் குறிப்புடன் என்பது கருத்து.

9. பொ-ரை: திருமால் பிரமர்களாகிய இருவரும் அடிமுடி காணமுயன்றபோது அவர்கட்கு அரியவராய்த் தோன்றி அவர்கள் தம்மைத் தொழுது எழுந்தபோது அழலுருவாய்க் காட்சி தந்த சிவபிரானாரது