எரிதரு முருவர்த மிடைமரு தடைவுறல
புரிதரு மனனவர் புகழ்மிக வுளதே. 9
1324. குடைமயி லினதழை மருவிய வுருவினர்
உடைமரு துவரினர் பலசொல வுறவிலை
அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர்
இடைமரு தெனமன நினைவது மெழிலே. 10
1325. பொருகட லடைதரு புகலியர் தமிழொடு
விரகினன் விரிதரு பொழிலிடை மருதினைப்
பரவிய வொருபது பயிலவல் லவரிடர்
விரவிலர் வினையொடு வியனுல குறவே. 11
திருச்சிற்றம்பலம்
_________________________________________________
இடைமருதினை அடைய விரும்புவார்க்குப்
புகழ் மிக உளதாகும்.
கு-ரை: இடைமருதை எய்த வேண்டும்
என்ற சித்தம் உடையார்க்குப் புகழ் உண்டாம்
என்கின்றது. தெரிவகை - ஆராய்ந்து அறிவதற்கு.
10. பொ-ரை: குடையையும்
மயிற்பீலியையும் கையில் ஏந்திய வடிவினை உடைய
சமணர்களும், மருதந்துவர் ஏற்றிய ஆடையை உடுத்த
புத்தர்களும் பலவாறு கூற அவர்களோடு நமக்கு
உறவில்லை என ஒதுக்கிச் செல்வங்கள் யாவும்
தம்மை வந்தடைந்தவராய் விளங்கும் அடியவர்களால்
தொழப் பெறும் திருவடிகளை உடைய சிவபிரானது
இடைமருது என மனத்தால் நினைவது அழகைத் தரும்.
கு-ரை: புறச்சமயிகள் பலபேச
அவற்றோடு நமக்கு உறவேயில்லை என்று அடைகின்ற
சில புண்ணியசீலர்கள் வணங்குகின்ற
திருவடியையுடையார் இடைமருது என எண்ணுவதே அழகு
என்கின்றது. குடை மயிலினதழை மருவிய உருவினர் -
குடையையும் மயிற் பீலியையும் தழுவிய
வடிவத்தையுடையவர்களாகிய சமணர்கள். துவர் - காவி.
பல சொல என்றது அவற்றின் பொருளற்ற தன்மையையும்
பொருந்தாக்கோளையும் புலப்படுக்க.
11. பொ-ரை: கரையைப் பொரும் கடலை
அணித்தாக உடைய புகலிப் பதியில் தோன்றியவனும்,
தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் விரிந்த
பொழில்களால் சூழப்பட்ட இடைமருதில் விளங்கும்
|