124. திருவீழிமிழலை
திருவிராகம்
பண்: வியாழக்குறிஞ்சி
பதிக எண்: 124
திருச்சிற்றம்பலம்
1337. அலர்மகண் மலிதர வவனியி னிகழ்பவர்
மலர்மலி குழலுமை தனையிட மகிழ்பவர்
நலமலி யுருவுடை யவர்நகர் மிகுபுகழ்
நிலமலி மிழலையை நினையவ லவரே. 1
1338. இருநில மிதன்மிசை யெழில்பெறு முருவினர்
கருமலி தருமிகு புவிமுத லுலகினில்
இருளறு மதியின ரிமையவர் தொழுதெழு
நிருபமன் மிழலையை நினையவ லவரே. 2
_________________________________________________
1. பொ-ரை: மலர்நிறைந்த கூந்தலை
உடைய உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டு மகிழ்பவரும்,
அழகிய திருமேனியை உடையவரும் ஆகிய சிவபிரானது நிலவுலகத்தே
நிறைந்த புகழை உடைய மிழலை நகரை நினைய வல்லவர்
திருமகளின் கருணையால் செல்வம் நிறையப் பெற்று
உலகில் வாழ்வர்.
கு-ரை: திருவீழிழலையை நினையவல்லவரே
சீதேவி சிறக்க இப்பூமியில் வாழ்பவராவர் என்கின்றது.
அலர்மகள் - லஷ்மி. அவனி - பூமி. இடம் - இடப்பாகம்.
நலம் - அழகு. உமைதனை இடம் மகிழ்பவர் உருவுடையவர்
நகராகிய வீழிமிழலையை நினைபவர் அலர்மகள் மலிதர
அவனியில் நிகழ்பவர் எனக்கூட்டிப் பொருள் காண்க.
2. பொ-ரை: எண்ணற்ற உயிரினங்கள்
வாழும் மண் முதலிய அனைத்துலகங்களிலும் இருளைப்
போக்கும் மதி போல ஒளியும் தண்ணளியும் செய்பவரும்,
தேவர்களால் தொழப் பெறும் தன்னொப்பார் இல்லாதவரும்
ஆகிய சிவபிரானது மிழலையை நினைப்பவர்கள் பரந்து
விரிந்த இவ்வுலகில் அழகிய உருவோடு விளங்குபவர்
ஆவர்.
கு-ரை: மண் முதலாகிய அண்டத்தில்
மயக்கமலமற்ற உண்மை ஞானிகளும் தேவர்களும் தொழும்
உவமனிலியாகிய இறைவன்
|