என்றிரு பொழுதுமுன் வழிபடு மவர்துயர்
ஒன்றிலர் புகழொடு முடையரிவ் வுலகே. 9
1357. புத்தரொ டமணர்க ளறவுரை புறவுரை
வித்தக மொழிகில விடையுடை யடிகடம்
இத்தவ முயல்வுறி லிறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே 10
1358. புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம்
பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை
_________________________________________________
யோர் சென்று அளவிடுதற்கு அரியவனாய்
ஓங்கி சிவபிரான் உறையும் சிவபுரம் என்று
இருபொழுதுகளிலும் நினைத்து வழிபடும் அடியவர் ஒரு
துன்பமும் இலராவர். இவ்வுலகில் புகழோடும் பொருந்தி
வாழ்வர்.
கு-ரை: சிவபுரத்தை இருவேளையிலும் வழிபடுவார்
துன்பஞ்சேரார்; இவ்வுலகிற் புகழொடும் பொருந்துவர்
என்கின்றது. அன்று இயல் உருவு - கோபித்த இயல்பினையுடைய
வடிவம், சென்று அளவிடல் அரியவன் உறை சிவபுரம்
எனப்பிரிக்க.
10. பொ-ரை: புத்தர்களும் சமணர்களும்
கூறுவன அறவுரைக்குப் புறம்பான உரைகளாகும், அவை அறிவுடைமைக்கு
ஏற்ப மொழியாதவை. அவற்றை விடுத்து விடையூர்தியை
உடையதலைவனாகிய சிவபிரானை நோக்கிச் செய்யும்
இத்தவத்தைச் செய்யும் முயற்சியை மேற்கொள்வீராயின்
அவ்விறைவனது சிவபுரத்தைச் சென்றடைந்து வழிபடுதல்
சிறந்த குணங்களை உங்கட்குத் தரும்.
கு-ரை: புறச் சமயிகளுடைய புறவுரைகள்
வித்தகம் ஒழியா; ஆதலால் சிவபுரத்தைத் தொழுதல்
உங்கட்குச் சிறந்த குணமாம் என்கின்றது. அவர்களது
அறவுரையாகத் தோன்றுவன யாவும் புறம்பான உரைகளாம்;
அதுவேயும் அன்றிச் சதுரப்பாடு உடையனவும் அல்ல. மெய்த்தக
- உண்மையாக.
11. பொ-ரை: அறிவுடையவர்கள் ஓதும் வேதங்களை
ஓதி உணர்ந்த புகலி மன்னனாகிய ஞானசம்பந்தன் தமிழைக்
கொண்டு சிவபுர நகரில் உறையும் எந்தையைப்
போற்றி உரை செய்த இவ்விசை
|