பக்கம் எண் :

1158திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


எந்தையை யுரைசெய்த விசைமொழி பவர்வினை
சிந்திமு னுறவுயர்கதிபெறு வர்ளே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

மாலையை ஓதி வழிபடுபவர் வினைகள் முற்பட்டு நீங்க உயர்கதி பெறுவார்கள்.

கு-ரை: திருஞானசம்பந்தப் பெருமான் சிவபுர நகருறை எந்தையைச் சொன்ன இப்பதிகத்தை இசையோடு மொழிபவர்கள் வினையைக் கெடுத்து உயர்கதி அடைவார்கள் என்கின்றது. புந்தியர் - புத்தியையுடையவர்கள். சிந்தி - கெடுத்து.

ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

கொடிநீடு விடையுடைய பெருமானை அடிபரவு

குணமேதை கவுணியர்கள் குலதீப சுபசரிதன்

அடியேன திடர்முழுதும் அறவீசு தமிழ்விரகன்

அணியான புகலிநக ரணையான கனைகடலின்

முடிநீடு பெருவலைகொ டலையூடு புகுவன்நுமர்

முறையேவு பணிபுரிவ னணிதோணி புனைவனைவை

படியாரு நிகரரிய வரியாரு மதர்நயனி

பணைவார்மென் முலைநுளையர் மடமாது னருள்பெறினே.

பெறுபயன் மிகப்புவியு ளருளுவன பிற்றைமுறை

பெருநெறி அளிப்பனபல் பிறவியை ஒழிச்சுவன

உறுதுய ரழிப்பனமுன் உமைதிரு வருட்பெருக

உடையன நதிப்புனலி னெதிர்பஃறி உய்த்தனபுன்

நறுமுறு குறைச்சமணை நிரைகழு நிறுத்தியன

நனிகத வடைத்தனது னருவிடம் அகற்றியன

துறுபொழில் மதிற்புறவ முதுபதிமன் ஒப்பரிய

தொழில்பல மிகுத்ததமிழ் விரகன் கவித்தொகையே.

- நம்பியாண்டார் நம்பி.