1361. திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு
மத்தையின்
சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோ
டங்கைச்சேர் வின்றிக்கே யடைந்துடைந்த
வெண்டலைப்
பாலேமேலே மாலேயப் படர்வுறு மவனிறகும்
பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள்
கொன்றையின்
போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையனிடங்
கங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த
பொன்னியின்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. 3
_________________________________________________
னது இடம் கழுமலம் என்கின்றது. பீடு -
பெருமை. நீடு ஆர் - புகழான் நீடுதலைப் பொருந்தும்.
மாடு ஆரும் - இடப்பக்கத்து இருக்கும். உச்சத்தான்
நச்சி - உச்சிப் போதினனாக விரும்பி. போல்:
அசை. ஊரா - ஊர்ந்து. ஊர் ஆம் நீள் வீதி - ஊரின் கண்ணதாகிய
நீண்ட திருவீதியில். ஒலிசெய் இசை வச்சத்தால் -
பாடலை வைத்ததால், மங்கை மார் - முனிபன்னியர்.
வாரா - வந்து. மாலாகும் - மயக்கமுறும் வண்ணம். வசிவலஅவன்
- வசீகரிக்கும் வன்மை யுடையவன். கார்ஆர் கார்ஆர்
- கருமை நிறம் பொருந்திய மேகங்கள் படிந்த.
3. பொ-ரை: திங்கள், தும்பை,
விளங்கித் தோன்றும் ஊமத்தமலர் ஆகியவற்றைச் சேர்த்துச்
செறிந்த நீராகிய கங்கை நதி, அழகிய கையில்
விளங்குவதையன்றி உடைந்த கபாலம், முடிகாண மயக்க
உணர்வுடையனாய் மேலே பறந்து சென்ற பிரமனாகிய அன்னத்தின்
இறகு, நஞ்சு பொங்கும் பாம்பு, கொன்றை மாலை ஆகியவற்றை
அணிந்து, வளைத்துக் கட்டிய சடையை உடைய சிவபிரானது
இடம்; கங்கைக்கு நிகரான அழகோடு கலந்து வந்த
பொன்னி நதியின் வாய்க்கால்கள் பாய்ந்து வளஞ்
சேர்க்கும் கழுமல வளநகராகும்.
கு-ரை: பிறை, தும்பை, ஊமத்தை இவைகள்
சேர்ந்து சேர்ந்து, தேவகங்கையோடு, திருக்கரத்திற்சேராதே
திருமுடியிற் சூடப்பெற்ற உடைந்த கபாலத்தின்பக்கல்,
அன்னத்தின் இறகையும், பாம்பையும், கொன்றை மாலையையும்
அணிந்த புரிசடைப் பெருமானிடம் கழுமலம் என்கின்றது.
திங்கட்கு தும்பைக்கு என்ற நான்கன் உருபுகள் ஏழாம்
வேற்றுமைப் பொருளில் வந்தன. திங்களிலும் தும்பையிலும்
ஊமத்தத்திலும் சேர்ந்து சேர்ந்து புனலாகப்
பொருந்திய சுரநதி எனப் பொருள் முடிபு காண்க. மேலே
மால் ஏயப் படர்வுறும் அவன் இறகும் - மேலே மயக்கம்
பொருந்தப் பறந்து செல்லும் மகாசூரனுடைய இறகும்.
புயங்கமங்கள் - பாம்புகள். தார் - மாலை. கங்கைக்கு
ஏயும் பொற்பு
|