1362. அண்டத்தா லெண்டிக்கு மமைந்தடங்கு
மண்டலத்
தாறேவேறே வானாள்வா ரவரவ ரிடமதெலாம்
மண்டிப்போய் வென்றிப்போர்
மலைந்தலைந்த வும்பரு
மாறேலாதார் தாமேவும் வலிமிகு புரமெரிய
முண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த
விஞ்சிசூழ்
மூவாமூதூர் மூதூரா முனிவுசெய்த வனதிடங்
கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த
மந்திரக்
காலேயோவா தார்மேவுங் கழுமல
வளநகரே. 4
_________________________________________________
ஆர் கலந்து வந்த பொன்னி - கங்கைக்குப்
பொருந்திய புனிதமாகிய அழகைப் பொருந்திக் கலந்து
ஒழுகும் காவிரி. கால் - வாய்க்கால்.
4. பொ-ரை: இம்மண்ணுலகில் இருந்துகொண்டே
எண் திசைகளையும் உள்ளடக்கிய அனைத்துலகங்களுக்கும்
சென்று வெற்றி கொண்டு வான் உலகை ஆளும் தேவர்களையும்
நெருங்கிச் சென்று வெற்றிப்போர் செய்து, அத்தேவர்களாலும்
எதிர்க்க இயலாதவர்களாய் விளங்கிய
அவுணர்களின் வலிமை மிக்க முப்புரங்களைத் தன்நெற்றி
விழியால் வெந்து முடியுமாறு செய்து அவ் இஞ்சி சூழ்ந்த
அழியாத பழமையான மூன்று ஊர்களும் முதுமை உடையவாய்
அழியுமாறு சினந்த சிவபிரானது இடம், செஞ்சொற்களைக்
கண்டு தேர்ந்து தொகுத்த அழகிய மந்திரங்களை மூச்சுக்
காற்றாகக் கொண்டு உருவேற்றி வருவோர் வாழும்
கழுமலமாகிய வளநகராகும்.
கு-ரை: இம்மண்ணுலகிலிருந்து,
வானாள்வார் இடம் எல்லாம் போய்ச் சண்டைசெய்த
தேவர்களும் மாறு ஏற்றுப் பொருதலாகாத திரிபுராதிகள்
மேவிய முப்புரம் எரிய நெற்றிக் கண்ணால் எரித்து.
மூதூர் மூதூராகா வண்ணம் முடிவு செய்தவன் இடம் கழுமலம்
என்கின்றது. அண்டத்தால் எண்திக்கும் அமைந்து
அடங்கும் மண்தலத்து ஆறே - இவ்வண்டத்தில் எட்டுத்
திக்கும் பொருந்தி அடங்கிய பூமியின் வழியாக. வேறேவான்
ஆள்வாரது இடம் எலாம் - தனித்த தேவர்களிடம் எல்லாவற்றையும்.
மண்டிப்போய் - நெருங்கிச்சென்று உம்பரும் மாறு ஏலாதார்
- தேவர்களாலும் எதிர்க்க இயலாத அசுரர்கள். வலிமிகுபுரம்
- வரபலமிக்க முப்புரம். முண்டத்தே வெந்திட்டே முடிந்து
இடிந்த - நெற்றியால் வெந்து அழிந்து இடிந்த. முண்டம்
ஆகுபெயராக நெற்றிக்கண்ணை யுணர்த்தியது. இஞ்சி -
மதிள். மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம் - மூப்பையடையாத
|