1363. திக்கிற்றே வற்றற்றே திகழ்ந்திலங்கு
மண்டலச்
சீறார்வீறார் போரார்தா ரகனுட லவனெதிரே
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்தெழுந்த
சண்டத்தீப்
போலேபூநீர் தீகான்மீப் புணர்தரு
முயிர்கடிறஞ்
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்தமங்கை
செங்கதத்
தோடேயாமே மாலோகத் துயர்களை பவனதிடங்
கைக்கப்பேர் யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக்
காடேயோடா வூரேசேர் கழுமல வளநகரே. 5
_________________________________________________
தொன்மையான நகர் இன்றும் தொன்மையானதாகா
வண்ணம் கோபித்தவனது இடம். செஞ்சொல் - நேரே
பொருள் பயக்கும் சொல்.
5. பொ-ரை: எட்டுத் திசைகளுக்கும் காவலர்களாகிய
தெய்வங்கள் அங்கங்கே இருந்து காவல் செய்து
விளங்கும் இம் மண்ணுலகைச் சீறி அழித்தற்கு வந்த
வலிய போர்வல்ல தாருகன் உடலை அவன் எதிரிலேயே
புகுந்து வெட்டி வீழ்த்தி, புதைந்தெழுந்து வந்த ஊழித்
தீப்போலத் தோன்றி மண் நீர் தீ கால் விண் ஆகிய
ஐம்பூத வடிவாய் விளங்கும் இவ்வுலகில் வாழும் உயிர்களை
அழிக்கச் சிவந்த கோபத்தோடு சொக்கநிருத்தத்தில்
நடனமாடி வந்த காளியின் கோபத்தை அவளோடு எதிர்நடனம்
ஆடி வென்று பெரிதான இவ்வுலக உயிர்களின் துயரைக்
களைந்தவன் ஆகிய சிவபிரானது இடம் பலரும் வெறுக்கக்
கனன்று வந்த பேரூழிக் காலத்தும் செறிந்த சோலைகளாகிய
காடுகளோடு அழியாத ஊராக விளங்கும் கழுமல வளநகராகும்.
கு-ரை: திக்குப்பாலகர்கள் அங்கங்கே
விளங்க, இவ்வுலகத்துச் சீறி வந்த தாரகன் உடலை
அவனெதிரிலேயே வெட்டி, விளைந்த ஊழித்தீயைப்
போன்ற காளியின் கோபமானது ஐம்பூதச் சேர்க்கை
யாலான உலகத்துற்ற உயிர்களுக்குப் பொருந்தாதபடி
உலகத்துயரைக் களைபவனது இடம் கழுமலநகர் என்கின்றது.
திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்திலங்கு
மண்டலம் - திக்குப் பாலகர்கள் அங்கங்கே அத்தன்மையோடு
விளங்குகின்ற உலகம். சீறு ஆர் - கோபித்தலைப்
பொருந்திய. சீறு ஆர் முதலியவற்றைத் தனித் தனி தாரகனோடு
ஒட்டுக. வீறு - தனித்திருத்தல். சண்டத்தீப் போலத்
தொடர்ந்த மங்கையினது எனக்கூட்டுக. உயிர்கள் திறம்
ஏயாமே துயர்களைபவன் என இயைக்க. சொக்கத்தே:
சொக்கம் என்ற நிருத்தம். நிர்த்தத்தே தொடர்ந்த
மங்கை - சொக்க நிருத்தத்தில் தோற்றுத்
|