1364. செற்றிட்டே வெற்றிச்சேர்
திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ்
சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய்
ஒற்றைச்சேர் முற்றற்கொம் புடைத்தடக்கை
முக்கண்மிக்
கோவாதேபாய் மாதானத் துறுபுகர் முகவிறையைப்
பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க
துக்கமும்
பேராநோய்தா மேயாமைப் பிரிவுசெய்த வனதிடங்
கற்றிட்டே யெட்டெட்டுக் கலைத்துறைக்
கரைச்செலக்
காணாதாரே சேராமெய்க் கழுமல
வளநகரே. 6
_________________________________________________
தொடர்ந்த காளி. செம்கதத்தோடு ஏயாமே
- சிவந்த கோபத்தோடு பொருந்தாதபடி. கைக்க - வெறுக்க.
பேர்யுக்கத்தே கனன்றும் - பெரிய ஊழித்தீயில்
கனன்றும். மிண்டு தண்டலைக் காடே ஓடா - அழியாது மிண்டிய
குளிர்ந்த காடுகள் அகலாத. இது நெருப் பூழியிலும் நிலைத்தநகரம்
என்பதறிவித்தது.
6. பொ-ரை: சலந்தரன், திரிபுரத்தசுரர்
முதலானவர்களைக் கொன்று வெற்றி பெற்று விளங்கும்
வலிமை பொருந்திய ஆண் யானை வடிவு கொண்ட தன்னைச்
சேர்தற் பொருட்டு வரும் நீண்ட மலர்மாலை அணிந்த
உமையம்மை பெண் யானை வடிவு கொண்டு வந்து கூட
முற்றிய ஒரு கொம்பையும் நீண்ட கையையும் மூன்று கண்களையும்,
இடைவிடாது மிகுந்து பொழியும் மதநீரையும்
புள்ளிகளோடு கூடிய முகத்தையும் உடைய விநாயகனைப் பெற்றெடுத்து
இவ்வுலகில் வாழும் மக்கட்குப் பெரிய துன்பங்களும்
நோய்களும் வந்து பொருந்தாதவாறு செய்து காத்தருளிய
சிவபிரானது இடம், அறுபத்து நான்கு கலைகளையும் முற்றக்
கற்றுக் கரை கண்டு அவற்றின் வழி ஒழுகுவோர் சேர்ந்துறைவதும்,
அவ்வாறு ஒழுகாதார் அடைய முடியாததுமாகிய கழுமல
வளநகராகும்.
கு-ரை: உமாதேவி பெண் யானையின் வடிவாய்,
அசுரர்களைக் கொன்று வெற்றி சேர்ந்த ஆண் யானையினது
தோள்களைச் சேர்ந்து ஒற்றைக் கொம்புடைய யானைமுகக்
கடவுளைப் பெற்று இவ்வுலகம் துன்பம் எய்தாவகை
பிரிவு செய்தவனது இடம் கழுமல வளநகர் என்கின்றது.
செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்த
தும்பி - சலந்தரன், திரிபுராதிகள் முதலிய அசுரர்களைக்
கொன்று வெற்றியடைந்து விளங்கிய ஆண்யானையினது.
மொய்ம்புறும் சேரே வாரா -
|