1365. பத்திப்பேர் வித்திட்டே பரந்தவைம்
புலன்கள்வாய்ப்
பாலேபோகா மேகாவாப் பகையறும் வகைநினையா
முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக்
குணங்கள்வாய்
மூடாவூடா நாலந்தக் கரணமு மொருநெறியாய்ச்
சித்திக்கே யுய்த்திட்டுத்
திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்
சேர்வார்தாமே தானாகச் செயுமவ னுறையுமிடங்
கத்திட்டோர் சட்டங்கங் கலந்திலங்கு
நற்பொருள்
காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே. 7
_________________________________________________
தோளைப் பொருந்தும் புணர்ச்சியில்
வந்து, நீள் கோதைத் தெரியிழை - நீண்ட மாலையணிந்த
உமாதேவியார். பிடியாது வாய் - பெண்யானையின் வடிவாய்.
ஒற்றைச்சேர் முற்றல் கொம்புடைத்தடக்கை - ஒற்றையாகச்
சேர்ந்த முற்றிய கொம்பினையுடைய துதிக்கையையும்,
மிக்கு ஓவாதேபாய் மாதானத்து உறு புகர்முக இறையைப்
பெற்றிட்டு - மிகுந்து இடைவிடாது பாய்கின்ற பெரிய
மதநீரோடு கூடிய யானைமுகக்கடவுளைப் பெற்று. இப்பார்பெருத்து
மிக்கதுக்கமும் - இவ்வுலகம் மிகப் பெரிய துக்கத்தையும்.
பேரா நோய் தாம் ஏயாமை - நீங்காத நோயையும்
பொருந்தாதபடி. எட்டெட்டுக் கலைத்துறை கரை செலக்
கற்றிட்டு - அறுபத்துநான்கு கலைகளையும் முடிவுபோகக்
கற்று. காணாதார் - கரை காணாதார். சேரா - அடையாத.
7. பொ-ரை: அன்பாகிய விதையை ஊன்றி,
பரந்துபட்ட சுவை முதலிய ஐம்புலன்கள் வழி ஒழுகாது தம்மைக்
காத்துக் காமம் முதலிய பகைகளைக் கடிந்து முத்திக்கு
இடையூறாகும் முக்குணங்களின்வழி ஒழுகாது அந்தக்கரணங்கள்
நான்கையும் ஒரு நெறிப்படுத்திச் சிந்தனையில்
செலுத்தி விளங்கும், மெய்ப்பரம்பொருளாகிய தன்னையே
எண்ணுபவர்களைத் தானாகச் செய்யும் சிவபெருமான்
உறையும் இடம், ஆறு அங்கங்களையும் கற்றுணர்ந்தோர்
தம்மோடு கலந்து விளங்கும் சிவபரம் பொருளின் திருவடிகளை
இடைவிடாது தியானித்து வாழும் கழுமல வளநகராகும்.
கு-ரை: அன்பாகிற விதையை இட்டு, புலன்வழி
பொருந்தாது, பகையாறையும் கடிந்து, முத்திக்கு இடையூறாகிய
சாத்விக இராஜஸ தாமஸங்களாகிய மூன்று குணங்கள் மூடாதபடி
அந்தக்கரணம் ஒரு நெறிப்பட சிந்திக்க, மெய்ப்பொருளையே
தியானிக்கின்ற சிவஞானிகளைச் சிவமாகவே செய்யும்
சிவன் உறையும் இடம் கழுமலவளநகர் என்கின்றது.
|