1367. பன்றிக்கோ லங்கொண்டிப் படித்தடம்
பயின்றிடப்
பானாமாறா னாமேயப் பறவையி னுருவுகொள
ஒன்றிட்டே யம்புச்சே ருயர்ந்தபங் கயத்தவ
னோதானோதா னஃதுணரா துருவின தடிமுடியுஞ்
சென்றிட்டே வந்திப்பத் திருக்களங்கொள்
பைங்கணின்
றேசால்வேறோ ராகாரந் தெரிவுசெய் தவனதிடங்
கன்றுக்கே முன்றிற்கே கலந்திலந்
நிறைக்கவுங்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. 9
__________________________________________________
கு-ரை: செம்பினால் இயன்ற மதில்
சூழந்த, மிகச் செறிவாக விளங்கும் பசிய பொழில்
சேர்ந்து வரும் கடற்றிரைவந்து மோதும் நகருக்குத்
தலைவனாகிய இராவணன், இவ்வுலக மக்களுக்கத் துன்பம்
விளைத்ததோடு மட்டுமின்றி. சிவனுறையும் கைலையையும்
எடுத்தலைச் செய்ய, மலர்போன்ற திருவடியின் விரல்
ஒன்றால் ஊன்றி, பொன்னணிகள் பூண்ட தோளை நெரியச்
செய்து, அவன் வணங்க வாளும் வாழ்நாளும் அருள்செய்தவனது
இடம் கழுமலம் என்கின்றது. செம்பைச் சேர் இஞ்சி -
செப்புத் தகடு வேய்ந்த முகட்டினையுடைய மதில். வாரிசம்
- கடல். இம்பர் - இவ்வுலகத்தவர். ஏர் ஆர் - எழுச்சியை
அடையச் செய்து; அதாவது எடுக்க என்பதாகும். வந்தனம்
செய்தாற்கு ஆர் ஆர் கூர்வாள் வாழ்நாள் அன்று
அருள்புரிபவன் எனப் பிரிக்க. கம்பத்து ஆர்தும்பி
திண் கவுள் சொரிந்த மும்மதக் கார் ஆர் சேறு ஆர்
மாவீதி - கம்பத்திற்கட்டிய யானையினது திண்ணிய
கன்னத்தினின்று சொரிந்த மும்மதத்தாலாகிய கரிய
சேறு பொருந்திய பெரிய வீதி.
9. பொ-ரை: திருமால் பன்றி உருவம்
எடுத்து இவ்வுலகைப் பிளந்து சென்று பாதாளம் வரைத்
தேடியும், நீரில் தோன்றிய தாமரை மலரில் உறையும்
நான்முகன் வேதங்களை ஓதுபவனாக இருந்தும் அதன் உண்மைப்
பொருளை உணராது அன்னப்பறவை வடிவம் எடுத்து வான
வெளியில் பறந்து சென்று தேடியும் தம் எதிரே தோன்றிய
வடிவினது அடிமுடிகளைக் காணாது அயர்த்துச் சென்று வழிபட
அவர்களின் பசுமையான கண்களுக்கு அழகிய நீலகண்டத்தோடு
தனது வல்லமையால் வேறோர் வடிவம் தெரியச் செய்தவனது
இடம் ஆன் கன்றுகள் முன்றிலில் நிறைந்து கலந்து நின்று
இல்லத்தை நிறைக்கவும் வாய்க்கால்கள் வந்து மேல்
ஏறிப் பாயவும் வளத்தால் நிறைந்து விளங்கும்
கழுமல வளநகராகும்.
|