1379. காழி யானய னுள்ளவா காண்பரே
காழி யானய னுள்ளவா காண்பரே
காழி யானய னுள்ளவா காண்பரே
காழி யானய னுள்ளவா காண்பரே. 10
1380. கொச்சையண் ணலைக்கூட
கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன்
மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன்
மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன்
மூடரே. 11
றேத்தும் சட்சமயங்களுக்கும்
அவரவர்கொண்ட பயனாயுள்ளவன். நேரி எனற்பாலது
நெரி எனக் குறுகிநின்றது. பத்துத்தலையுள்ள
இராவணன் முரியும்படி திருவிரலாலடர்த்தவன்
யாரென்னில், சண்பை என்னும் திருப்பதியிலே
வீற்றிருக்கும் கடவுள்.
10. கு-ரை: நிலைபெற்றுநின்ற
நின்மலமாகிய சித்தத்தையுடைய பத்தரிடத்துச்
சத்தியப்பொருள் விளையும்பொருட்டு
ஞானநாட்டத்திலே அவர்களைக் கடாக்ஷிக்கின்றவன்.
திருமிடற்றில் களங்கமுடையானது கருணையை நினைத்து
ஞானநாட்டத்தையுடைய சிவஞானிகள் சிவனுக்கிச்சை
தன்னடியார்க்கே ஆங்காரத்தைத் தடுக்குமதே
பணியெனத் தமதறிவிலே கருதாநிற்பர். விஷ்ணுவும்
பிர்மாவும், திருமுடியும் திருவடியும் காணும் பொருட்டு
வராகமும் அன்னமுமாகக் கருதி வடிவுகொண்டார். ஐயோ!
உள்ளபடி கருதிச் சிவனைப்பெறாமல் அவர்கருதியதேது
எனில். அன்னியமே கண்டனர். கண் எனற்பாலது காண்
என நீண்டது. என்பொருட்டால் காழி என்னும்
திருப்பதியைப் படைத்தானை, என் ஐயனை, எனது ஆசையை,
கீழ்ச் சொன்ன இருவர்களும் தாங்கள் தேடும்
தேட்டப் பிரிவில் மயக்கத்திலே
தேட்டமழித்துத் தோன்றா நிற்பவனைத் தேடி
மறத்தலொழிந்து எவ்வாறு காண்பர்.
11. கு-ரை: ஆணவமலத்தோடு கூடியுள்ள
மயக்கத்துடன் மாறுபட்டோர்கள் மாயாதனுவாலும்
மந்திரதனுவாலும் மறைக்கப்படார்கள். மூடார்
எனற்பாலது மூடர் எனக் குறுகிநின்றது. புலால்
நாற்றத்தைப் பொருந்திய அழுக்குமெய்யைப்
பொய்யென்று மனங்கொள்ளமாட்டாமல் அதுவே தமது
நிலைபெற்றவுருவாக நினைத்துத் துவராடையாலே
உடம்பைச் சூழப்பட்ட பௌத்தரும், பேதைத்
தன்மையையுடைய மச்சியகந்தியினுடைய நலத்தைக்
கொள்ளும்
|