பக்கம் எண் :

1178திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


128. திருப்பிரமபுரம்

பதிக வரலாறு:

(117 - ஆம் பதிகம் பார்க்க)

திருவெழுகூற்றிருக்கை
பண் : வியாழக்குறிஞ்சி

பதிக எண்: 128

திருச்சிற்றம்பலம்

1382. ஓருரு வாயினை மானாங் காரத்
தீரியல் பாயொரு விண்முதல் பூதலம்
ஒன்றிய விருசுட ரும்பர்கள் பிறவும்
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை
இருவரோ டொருவ னாகி நின்றனை. 5

இப்பதிகத்துக்குப் பழைய உரையில் அளித்துள்ள குறிப்புரையே. முதலிலும், அதைத்தொடர்ந்து பொழிப்புரையும் எழுதப் பெற்றுளது.

கு-ரை: ஓருருவாயினை - என்றது, எல்லாத் தத்துவங்களையுங் கடந்து வாக்குமனாதிகளுக்கு எட்டாமலிருந்துள்ள தற்கருபந்தான் பஞ்சகிர்த்தியங்களையும் நிகழ்த்தவேண்டி நினது இச்சையால் எடுத்துக்கொண்டிருக்கும் திருமேனியை (எ-று)

மானாங்காரத்தீரியல்பாய் - என்றது. மானென்பது - சத்தி - ஆங்காரத்தீரியல்பாய் - தற்சத்தியைக் கொண்டு சர்வானுக் கிரகமான பஞ்சகிர்த்தியங்களை நடத்த வேண்டிச் சத்தி சிவமாகிய இரண்டு உருவாயினை எ-று.

ஒரு - என்றது. அந்தச் சத்தியுடனே கூடி யொன்றாகி நின்றனை எ-று.

விண்முதல் பூதலம் ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும் படைத்தளித்தழிப்ப மும்மூர்த்திகளாயினை - என்றது. ஆகாச முதலாகப் பூமியீறாகவுள்ள பஞ்சபூதங்களையும் சந்திராதித்தர்களையும் தேவர்களையும் மற்றுமுள்ள ஆத்மாக்களையும் படைக்கைக்கும், காக்கைக்கும், அழிக்கைக்கும், பிர்மா விஷ்ணு உருத்திரன் என்கின்ற திரிமூர்த்திகளுமாயினை எ-று.

இருவரோடு ஒருவனாகி நின்றனை - என்றது. பிரமாவையும்