ஒருதனு விருகால் வளைய வாங்கி
முப்புரத் தோடு நானில மஞ்சக் 15
கொன்று தலத்துற வவுணரை யறுத்தனை
ஐம்புல னாலா மந்தக் கரணம்
முக்குண மிருவளி யொருங்கிய வானோர்
ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ
டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து 20
நான்மறை யோதி யைவகை வேள்வி
அமைத்தா றங்க முதலெழுத் தோதி
வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை
_________________________________________________
காய்ந்த நால்வாய் மும்மதத்து
இருகோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை - என்றது
தன்னிழலைக் காயத்தக்க கோபத்தினையும்
தொங்கும் வாயினையும் இரண்டு கொம்பினையும்
உடையதொரு ஒப்பில்லாத ஆனையினுடைய
பெலங்களையெல்லாம் கெடுத்து உரித்துப்
போர்த்தனை எ-று.
ஒரு தனு இருகால் வளைய வாங்கி
முப்புரத்தோடு நால்நிலம் அஞ்சக் கொன்று தலத்துறு
அவுணரை அறுத்தனை - என்றது. ஒப்பில்லாத
பொன்மலையாகிய வில்லை இருதலையும் வளைய வாங்கி
அஸ்திரத்தைத் தொடுத்து, மூன்று புராதிகளாகிய
அவுணரை அறுத்தனை எ-று.
ஐம்புலம் நாலாம் அந்தக்கரணம்
முக்குணம் இருவளி ஒருங்கிய வானோர் ஏத்த நின்றனை
- என்றது. சத்த - பரிச - ரூப - ரச - கந்தம் எனப்பட்ட
ஐம்புலங்களையும், மனம் - புத்தி - யாங்கார -
சித்தம் என்கின்ற அந்தக்கரணங்கள்
நான்கினையும், ராசத - தாமத - சாத்துவிகம்
என்கின்ற மூன்று குணங்களையும், பிராணன் - அபானன்
என்கின்ற இரண்டு வாயுவையும், மூலாதாரத்திலே
ஒடுக்கிக்கொண்டு ஏகாக்ரசித்தராயிருந்துள்ள
தேவர்கள் ஏத்த நின்றனை எ-று.
ஒருங்கிய மனத்தோடு இருபிறப்பு ஓர்ந்து
முப்பொழுது குறைமுடித்து நான்மறை ஓதி ஐவகை
வேள்வியமைத்து ஆறங்க முதலெழுத்தோதி வரன்முறை
பயின்றெழு வான்றனைவளர்க்கும் பிரமபுரம் பேணினை
- என்றது, ஆகாரம் - நித்திரை - பயம் - மைதுனம்
இவற்றில் செல்லும் மனத்தைப் பரமேசுவரனுடைய ஸ்ரீ
|