பக்கம் எண் :

 128. திருப்பிரமபுரம்1181


அறுபத முரலும் வேணுபுரம் விரும்பினை 25
இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை

_________________________________________________

பாதங்களிலே யொருக்கி முன்பு தாம் மாதாவின் உதரத்திலே பிறந்த பிறப்பும், உபநயனத்தின் பின்பு உண்டான பிறப்புமாகிய இரண்டையும் விசாரித்து மூன்று சந்தியும், செபதர்ப்பண - அனுட்டான - ஓமங்களையுமுடித்து, இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்கின்ற நாலு வேதங்களையும் ஓதி, சிவபூசை - குருபூசை - மகேசுரபூசை - பிராமண போசனம் - அதிதிபுசிப்பு என்கின்ற ஐந்து வேள்வியும் முடித்து, ஓதல் - ஓதுவித்தல் - வேட்டல். வேட்பித்தல் - ஈதல் - ஏற்றல் என்னும் ஆறங்கங்களையும் நடத்தி இவைகளுக்கு முதலாயிருந்துள்ள பிரணவத்தையும் உச்சரித்துத் தேவலோகத்திலுள்ள தேவர்களுக்கும் அவிகொடுத்து மழையைப் பெய்விக்கும் பிராமணராலே பூசிக்கப்பட்ட பிரமபுரமே திருப்பதியாக எழுந்தருளியிருந்தனை என்றவாறு - ஆறங்கமாவன மந்திரம் - வியாகரணம் - நிகண்டு - சந்தோபிசிதம் - நிருத்தம் - சோதிடம் என இவ்வாறு வழங்கப்படுகின்ற முறையொன்று.

அறுபதமுரலும் வேணுபுரம் விரும்பினை - என்றது. அறுகாலுடைய வண்டுகளிசைபாடும் பொழில்சூழ்ந்த வேணுபுரம் என்பதே திருப்பதியாக எழுந்தருளினை என்றவாறு - வேணுபுரம் என்பதற்குக் காரணம்: வேணு என்பானொரு இந்திரனுடன் கெசமுகன் என்பானொரு அசுரன் வந்து யுத்தம் பண்ண அவனுடனே பொருது அபசெயப்பட்டுப் பிரமபுரமென்னு முன் சொன்ன பதியிலேவந்து பரமேசுவரன் திருவடிகளிலே ‘தம்பிரானே! அடியேனுக்கு அமைத்தருளின சுவர்க்கலோகத்தைக் கசமுகன் சங்கரிக்க, அவனுடன் யுத்தம்பண்ணி அபசெயப்பட்டுப் போந்தேன்‘ என்று விண்ணப்பஞ்செய்து பூசிக்கையாலே தம்பிரானும் கணேசுரனைத் திருவுளத்தடைத்து ‘வாராய் கணேசுரனே! கசமுகன் வரப்பிரசாதமுடையவன்; ஒருவராலுமவனைச் செயிக்கப்போகாது; நீயும் அவன் வடிவாகச் சென்று உன் வலக் கொம்பை முறித்தெறிந்து அவனைக் கொன்று வேணு என்கின்ற இந்திரனைச் சுவர்க்கலோகத்திலே குடிபுகவிட்டுவா‘ என்று திருவுளம் பற்றக் கணேசுரனும் அவன் வடிவாகச் சென்று தன் வலக்கொம்பை முறித்தெறிந்து அவனையுங்கொன்று வேணு என்கின்ற இந்திரனையும் சுவர்க்கலோகத்திலே குடிபுகவிட உண்டானது என்க.

இகலியமைந்துணர் புகலி அமர்ந்தனை - என்றது. தேவர்கள் முன்பு புகலிடமென்று புகுதலால் திருப்புகலி என்பதே திருப்பதியாக எழுந்தருளி இருந்தனை என்றவாறு - தேவலோகமான அமராபதி