பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு
விளங்கினை
பாணிமூ வுலகும் புதையமேன் மிதந்த
தோணிபுரத் துறைந்தனை தொலையா விருநிதி
வாய்ந்த பூந்தரா யேய்ந்தனை 30
_________________________________________________
யைச் சூரபத்மா என்பானொரு அசுரன்
வந்து சங்காரம் பண்ண அவனுடனே தேவேந்திரன்
முதலாயுள்ளார் பொருது அபசெயப்பட்டு
யுத்தத்தையொழிந்து இனி நமக்குப் பரமேசுவரன் ஸ்ரீ
பாதமொழிய புகலிடமில்லை என்று வேணுபுரத்திலே
வந்து பரமேசுவரனைத் தெண்டம்பண்ணி அவனாலுண்டான
நலிகையை விண்ணப்பஞ் செய்து எங்களை ரக்ஷித்தருள
வேண்டும் என்னப் பரமேசுவரனும் சுப்பிரமணியரைத்
திருவுளத்து அடைத்து ‘வாராய் சுப்பிரமணியனே! நீ
ஆறுமுகமும் பன்னிரண்டு கையுமாகப் போய்ச்
சூரபத்மாவையும் செயித்துத் தேவலோத்திலே
தேவர்களையும் குடிபுகுத விட்டுவா‘ என வருகை காரணம்.
பொங்கு நாற்கடல் சூழ் வெங்குரு
விளங்கினை - என்றது. மிகவும் கோபிக்கப்பட்ட
கடல்சூழ்ந்த வெங்குரு என்றதே திருப்பதியாக
எழுந்தருளியிருந்தனை என்றவாறு -
லோகங்களுக்கெல்லாம் தேவகுருவாகிய
பிரகஸ்பதிபகவான் என்னையொழிந்து
கர்த்தாவுண்டோ என்று மனோகெர்வஞ்
சொல்லுகையாலே பரமேசுவரனும் இவன் மகா
கெர்வியாயிருந்தான் இவனுடைய கெர்வத்தை
அடக்கவேண்டுமென்று திருவுளத்தடைத்தருளித்
தேவர்க்குக் குருவாகிய அதிகாரத்தை மாற்றியருளப்
பயப்பட்டுப் புகலி என்கின்ற திருப்பதியிலே
போய்ப்பரமேசுவரனைத் தெண்டம்பண்ணி அடியேன்
செய்த அபராதங்களைப் பொறுத்தருளி அடியேனை
ரக்ஷித்தருள வேண்டும் என்று விண்ணப்பஞ்செய்யத்,
தம்பிரானும் நீ மகா வேகியாயிருந்தாய் என்று
திருவுள்ளமாய் முன்புபோல் தேவர்களுக்குக்
குருவாகிய அதிகாரத்தையும் கொடுத்த காரணத்தால்
வெங்குரு என்கின்ற பெயருண்டாயது.
பாணி மூவுலகும் புதைய மேல்மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை - என்றது. பாணி என்கின்ற
சலம் பிரளயமாய்ப் பூமி அந்தரம் சுவர்க்கம்
மூன்று லோகங்களையும் புதைப்ப அதைச் சங்காரம்
பண்ணியருளி அதின்மேலே தோணிபோல மிதந்த
வெங்குருவாகிய தோணிபுரம் என்றதே திருப்பதியாக
எழுந்தருளியிருந்தனை எ-று.
தொலையா இருநிதிவாய்ந்த
பூந்தராயேய்ந்தனை - என்றது.
|