முந்நீர்த் துயின்றோ னான்முக னறியாப்
பண்பொடு நின்றனை சண்பை
யமர்ந்தனை 35
_________________________________________________
பலவிடத்தினும் நரமாமிசம்
புசிக்கையிலே, ஒருநாள் மாமிசந்தேடிச்
சோழவம்சத்திலே ஒரு ராசா
தினசரிதனாயிருக்கிறவிடத்திலே இந்தப்
புறாவாகிய ரிஷியும் போய் ராசாவைப் பார்த்து
"எனக்கு அதிக தாகமாயிருக்கின்றது சற்று
நரமாமிசம் இடவல்லையோ" என்ன ராசாவும்
"உனக்கு எவ்வளவு மாமிசம் வேண்டும்" எனப்
புறாவும், உன்சரீரத்திலே ஒன்று பாதி தரவேண்டும்
என்று ராசாவும் தன்சரீரத்திலேயொன்று பாதி
அரிந்திடப் புறாவுக்கு நிறையப் போதாமல்
சர்வமாமிசத்தையும் அரிந்திட்டு ராசாவும்
சோர்ந்துவிழ இந்தப் புறாவாகிய பக்ஷியும் தமக்குத்
தன் சரீரத்தை அரிந்திட்டுப் பிழைப்பித்த ராசா
சரீரம்பெறும்படி எங்ஙனே என்று விசாரிக்கு மளவில்
பரமேசுவரனொழிய வேறில்லை என்று
சிரபுரத்திலேவந்து பரமேசுவரனை நோக்கி
அர்ச்சிக்கப் பரமேசுவரனும் திருவுளத்
தடைத்தருளத் "தம்பிரானே அடியேன் தாகந்தீரத்
தன் சரீரத்தை அரிந்திட்ட ராசாவுக்கு முன்போல
உடலும் பிரசாதித்து அடியேனுக்கும் இந்தச்
சாபதோஷம் நீக்கவேண்டும்" என்று
விண்ணப்பஞ்செய்ய, ராசாவுக்குச் சரீரமும்
கொடுத்துப் புறாவுக்கு வேண்டும்
வரப்பிரசாதங்களையும் பிரசாதித்துச்
சாபதோஷமும் மாற்றியருளிப் புறாவும்
பூசிக்கையாலே புறவம் என்கின்றதே திருப்பதியாக
எழுந்தருளி இருந்தனை எ-று.
முந்நீர்த் துயின்றோன் நான்முகன்
அறியாப் பண்பொடு நின்றனை - என்றது. ஆற்றுநீர்
வேற்றுநீர் ஊற்றுநீர் என்று சொல்லப்பட்ட
முந்நீராகிய சமுத்திரத்திலே துயிலாநின்ற
நாராயணனும் நான்முகத்தினையுடைய பிர்மாவும்
அடியும் முடியும் தேடற்கு அரிதாய் நின்ற
பண்பினையுடையையாய் எழுந்தருளியிருந்தனை எ-று.
சண்பை அமர்ந்தனை - என்றது. துர்வாச
மகரிஷி யாசிரமத்தே கிருஷ்ணாவதாரத்திலுள்ள
கோபாலப் பிள்ளைகளெல்லா மிந்த ரிஷியை
அசங்கதித்துத் தங்களிலே ஒருவனைக்
கர்ப்பிணியாகப் பாவித்துச்சென்று அவள் பெறுவது
ஆணோ பெண்ணோ என்று அந்த ரிஷியைக் கேட்கையாலே
அவர் கோபித்து இவள் பெறுவது ஆணுமல்ல பெண்ணுமல்ல
உங்கள் வமிசத்தாரையெல்லாஞ் சங்கரிக்கைக்கு
ஒரு இருப்புல்க்கை பிறக்கக்கடவதென்று
சபிக்கையாலே அவன் வயிற்றிலிருந்து ஒரு
இருப்புலக்கைவிழ அந்தச் சேதியைக்
|