பக்கம் எண் :

 128. திருப்பிரமபுரம்1185


ஐயுறு மமணரு மறுவகைத் தேரரும்
ஊழியு முணராக் காழி யமர்ந்தனை

_________________________________________________

கிருஷ்ணன் கேட்டுத் துர்வாச மகரிஷி சாபங் கேவலமல்ல என்று அந்த இருப்புலக்கையைப் பொடியாக அராவி அந்தப் பொடியைச் சமுத்திரத்திலே போட, அராவுதலுக்குப் பிடிபடாத ஒரு வேப்பம் விதைப் பிரமாணமுள்ள இரும்பை ஒரு மீன் விழுங்கி ஒரு வலைக்காரன்கையிலே அகப்பட்டது. அதன் வயிற்றில்கிடந்த இரும்பைத் தன் அம்புத் தலையிலே வைத்தான். மற்றுஞ் சமுத்திரத்திற்போட்ட இரும்புப் பொடிகளெல்லாம் அலையுடனே வந்த கரைசேர்ந்து சண்பையாக முளைத்துக் கதிராய் நின்றவிடத்திலே கோபால குமாரர்கள் விளையாடி வருவோமென்று இரண்டு வகையாகப் பிரிந்து சென்று அந்தச் சண்பைக்கதிரைப் பிடுங்கி எறிந்துகொண்டு அதனாலே பட்டுவிழுந்தார்கள். இதைக் கிருஷ்ணன் கேட்டு இதனாலே நமக்கு மரணமாயிருக்குமென்று விசாரித்து ஆலின்மேலே ஒரு இலையிலே யோகாசனமாக ஒரு பாதத்தை மடித்து ஒரு பாதத்தைத் தூக்கி அமர்ந்திருக்கிற சமயத்திலே அந்த மீன்வேடன் பக்ஷி சாலங்களைத் தேடி வருகிறபோது தூக்கிய பாதத்தை ஒரு செம்பருந்து இருக்கிறதாகப்பாவித்து அம்பைத் தொடுத்தெய்யக் கிருஷ்ணனும் பட்டுப் பரமபதத்தை அடைந்தான். இந்த சாபதோஷம் துர்வாச மகரிஷியைச்சென்று நலிகையாலே இந்தத் தோஷத்தை நீக்கப் பரமேசுவரனை நோக்கி அர்ச்சிக்கப் பரமேசுவரனும் திருவுளத் தடைத்தருள ரிஷியும் தெண்டம்பண்ணித் ‘தம்பிரானே! அடியேனுடைய சாபத்தாலே கிருஷ்ணனுடைய வமிசத்திலுள்ள கோபால ரெல்லாருஞ் சண்பைக் கதிர்களால் சங்காரப்படுகையாலே அந்தத் தோஷம் அடியேனைவந்து நலியாதபடி திருவுளத்தடைத்தருளி ரக்ஷிக்கவேண்டும்‘ என்று விண்ணப்பஞ்செய்யத் துர்வாச மகரிஷிக்குச் சண்பை சாபத்தினாலுள்ள தோஷத்தை நீக்கிச் சண்பைமுனி என்கின்ற நாமத்தியைும் தரித்தருளிச் சண்பை என்கின்றதே திருப்பதியாக எழுந்தருளி யிருந்தனை எ-று.

ஐயுறும் அமணரும் அறுவகைத்தேரரும் ஊழியும் உணராக் காழியமர்ந்தனை - என்றது, வேதாகம புராண சாத்திரங்களிலுள்ள பலத்தை இல்லை என்று ஐயமுற்றிருக்கின்ற அமணரும் கைப்புப் - புளிப்புக் - கார்ப்பு - உவர்ப்பு - துவர்ப்புத் - தித்திப்பு என்கின்ற அறுவகை ரசங்களையும் உச்சிக்கு முன்னே புசிக்கின்றதே பொருளென்றிருக்கின்ற புத்தரும், ஊழிக்காலத்தும் அறியாமல், மிகவும் காளிதமான விஷத்தையுடைய காளி என்கின்ற நாகம் பூசிக்கையாலே சீகாழி என்கின்றதே திருப்பதியாக எழுந்தருளியிருந்தனை எ-று.