இருமையி னொருமையு மொருமையின்
பெருமையும்
மறுவிலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணிய னறியும் 45
அனைய தன்மையை யாதலி னின்னை
நினைய வல்லவ ரில்லைநீ ணிலத்தே.
திருச்சிற்றம்பலம்
_________________________________________________
ஒருமையின் பெருமை - என்றது. தானே ஒரு
எல்லையில்லாத சிவமாயிருந்துள்ளதை எ-று.
மறுவிலாமறையோர் கழுமலமுதுபதிக்
கவுணியன் கட்டுரை கழுமலமுதுபதிக் கவுணியன் அறியும் -
என்றது. மறுவற்ற பிர்ம வமிசத்தில் தோன்றித்
தீக்கைகளாலே மலத்தைக் கழுவப்பட்ட கவுணியர்
கோத்திரத்திலே வந்த சீகாழிப்பிள்ளை
கட்டுரையை விரும்பிக் கழுமலம் என்கின்ற
முதுபதியிலே எழுந்தருளினை. கம் என்கின்ற
பிரமசிரசிலே உண்கின்றவனே அறியும் எ-று.
அனைய தன்மையை யாதலின் - என்றது.
அத்தன்மையாகிய இயல்பினையுடையையாதலின் எ-று.
நின்னை நினைய வல்லவர் இல்லை
நீணிலத்தே - என்றது. நின்னை நினைக்க
வல்லார்களுக்குப் பிறப்பு இல்லை என்றவாறு.
பொ-ரை: சொரூப நிலையில்
விளங்கும் பரசிவம் ஆகிய நீ உனது இச்சையால்
ஐந்தொழில்களை நிகழ்த்த வேண்டி எடுத்துக்
கொண்ட ஓருருவமாகிய திருமேனியை உடையை ஆயினை,
உன் சக்தியைக் கொண்டு அவ்
ஐந்தொழில்களை நடத்தும் திருவுளக் குறிப்போடு
சத்தி சிவம் என்னும் இரு உருவாயினை,
விண் முதலிய பூதங்களையும் சந்திர
சூரியர்களையும் தேவர்கள் மக்கள் முதலியோரையும்
படைத்துக் காத்து அழிக்க அயன் அரி அரன் என்னும்
மும்மூர்த்திகள் ஆயினை,
பிரமன் திருமால் ஆகிய இருவரையும்
வலத்திலும் இடத்திலும் அடக்கி ஏக மூர்த்தியாக
நின்றாய்,
|