129. திருக்கழுமலம்
பண் : மேகராகக்குறிஞ்சி
பதிக எண்: 129
திருச்சிற்றம்பலம்
1383. சேவுயருந் திண்கொடியான்
றிருவடியே
சரணென்று சிறந்தவன்பால்
நாவியலு மங்கையொடு நான்முகன்றான்
வழிபட்ட நலங்கொள்கோயில்
வாவிதொறும் வண்கமல முகங்காட்டச்
செங்குமுதம் வாய்கள்காட்டக்
காவியிருங் கருங்குவளை கருநெய்தல்
கண்காட்டுங் கழுமலமே. 1
1384. பெருந்தடங்கண்
செந்துவர்வாய்ப் பீடுடைய
மலைச்செல்வி பிரியாமேனி
அருந்தகைய சுண்ணவெண்ணீ
றலங்கரித்தா
னமரர்தொழ வமருங்கோயில்
_________________________________________________
1. பொ-ரை: விடை வடிவம் எழுதி
உயர்த்திய வலிமையான கொடியை உடைய சிவபிரானின்
திருவடிகளே நமக்குச் சரண் என்று நாவின்கண்
பொருந்திய கலைமகளோடு வந்து நான்முகன் சிறந்த
அன்போடு வழிபட்ட அழகிய கோயில்;
வாவிகள்தோறும் மலரும் வளவிய தாமரை மலர்கள்
மகளிர்தம் முகங்களையும் செங்கழுநீர் மலர்கள்
வாய்களையும், காவிமலர்கள், கருங்குவளை மலர்கள்,
கரிய நெய்தல் மலர்கள் ஆகியன கண்களையும்
போலத் தோன்றி மலரும் கழுமலத்தின்கண்
விளங்குவதாகும்.
கு-ரை: ‘விடையுயர்த்த பெருமான்
திருவடியே சரண்‘ என்று பிரமன் வழிபட்ட கோயில்,
நீர்ப்பூக்கள் நேரிழையார் அவயவங்களைக்
காட்டும் கழுமலம் என்கின்றது. சே - இடபம். நா
இயலும் மங்கை - சரஸ்வதி.
2. பொ-ரை: அகன்ற விழிகளையும்,
பவளம் போலச் சிவந்த வாயையும் உடைய பெருமை
மிக்க மலைமகளாகிய உமையம்மை பிரியாத
திருமேனியில், அருமையான திருவெண்ணீற்றுப் பொடியை
|