பக்கம் எண் :

 129. திருக்கழுமலம்1191


தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறு

மிறைவனது தன்மைபாடிக்

கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப்

பாட்டயருங் கழுமலமே. 2

1385. அலங்கன்மலி வானவருந் தானவரு

மலைகடலைக் கடையப்பூதங்

கலங்கவெழு கடுவிடமுண் டிருண்டமணி

கண்டத்தோன் கருதுங்கோயில்

விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபுக்

கூன்சலிக்குங் காலத்தானுங்

கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய

மெய்யர்வாழ் கழுமலமே. 3

_________________________________________________

அழகுறப் பூசிய சிவபிரான் தேவர்கள் தன்னை வணங்க எழுந்தருளி யுள்ள திருக்கோயில், வள்ளன்மையோடு விளங்கும் நீண்ட கைகளை உடைய முத்தீ வேட்கும் அந்தணர்களின் வீடுகள்தோறும் கரியவான பெரிய கண்களை உடைய மகளிர் இறைவனுடைய இயல்புகளைக் கூறிக்கொண்டு கழற்சிக்காய் அம்மானை பந்து ஆகியன ஆடி மகிழும் கழுமல நகரின் கண் உள்ளது.

கு-ரை: பெரியநாயகி பிரியாத மேனியில் திருநீற்றால் அலங்கரித்தான் கோயில் இது என்கின்றது. துவர் - பவளம். பீடு - பெருமை. தரும் தடக்கை - வழங்கும் விசாலமான கை. முத்தழலோர் - முத்தழல் ஓம்பும் அந்தணர். அந்தணர் வீட்டில் மகளிர் இறைவன் புகழைப்பாடி அம்மானை பந்து கழங்கு ஆடுகின்றார்கள் என்பதாம்.

3. பொ-ரை: மலர்மாலை அணிந்த தேவர்களும் அசுரர்களும் கூடி அலைகள் பொருந்திய திருப்பாற்கடலைக் கடைந்தபோது பூதங்களும் கலங்குமாறு எழுந்த கொடிய நஞ்சை, அவர்களைக் காத்தற்பொருட்டுத் தான் உண்டு, கரிய மணி போன்ற மிடற்றினன் ஆகிய சிவபிரான் தனது உறைவிடம் என்று மகிழ்வோடு நினையும் கோயில்; மலைகள் மீது தங்கி மழை பொழியும் மேகங்கள் மழை பொழிவதை மறத்தற்குரியதான மகர ராசியில் சனி புகுந்து உணவு கிடைக்காமல் மக்கள் உடல் இளைக்கும் பஞ்ச காலத்திலும் மனம் கலங்காது பெரிய வள்ளன்மையோடு மக்களைக் காக்கும் உண்மையாளர் வாழும் கழுமலத்தின்கண் உள்ளது.