1386. பாரிதனை நலிந்தமரர்
பயமெய்தச்
சயமெய்தும் பரிசுவெம்மைப்
போரிசையும் புரமூன்றும்
பொன்றவொரு
சிலைவளைத்தோன்
பொருந்துங்கோயில்
வாரிசைமென் முலைமடவார்
மாளிகையின்
சூளிகைமேன் மகப்பாராட்டக்
காரிசையும் விசும்பியங்குங்
கணங்கேட்டு
மகிழ்வெய்துங் கழுமலமே. 4
1387. ஊர்கின்ற வரவமொளி விடுதிங்க
ளொடுவன்னி மத்தமன்னும்
நீர்நின்ற கங்கை நகு வெண்டலைசேர்
செஞ்சடையா னிகழுங் கோயில்
_________________________________________________
கு-ரை: தேவரும் அசுரரும்
பாற்கடலைக் கடைய எழுந்த விடத்தை உண்டு
கறுத்தகண்டன் உறைகோயில் இது என்கின்றது.
அலங்கல் - மாலை. விலங்கல் - மலை. புயல் - மேகம்.
மீன் சனி புக்கு - மகர ராசியில் சனி புகுந்து. ஊன்
சலிக்கும் காலத்தானும் - உடல் வாடிய காலத்திலும்.
பஞ்சகாலத்தும் கலங்காத வள்ளல்கள் வாழும் நகர்
என்க.
4. பொ-ரை: மண்ணுலக மக்களை
வருத்தியும், தேவர்களை அஞ்சுமாறு செய்தும், வெற்றி
பெறும் இயல்பினராய்க் கொடிய போரை நிகழ்த்தும்
அவுணர்களின் முப்புரங்களும் அழிய ஒப்பற்ற வில்லை
வளைத்த சிவபிரான் உறையும் கோயில்; கச்சணிந்த
மென்மையான தனங்களை உடைய மகளிர் மாடவீடுகளின்
உச்சியில் நின்று தம் குழந்தைகளைப் பாடிப்
பாராட்டும் இசையை மேகங்கள் உலாவும்
வானவெளியில் உலாவும் கந்தருவர்கள் கேட்டு
மகிழும் கழுமல நகரில் உள்ளதாகும்.
கு-ரை: உலகை வருத்தி, தேவர் அஞ்ச,
வெல்லும் வகை வில்லை வளைத்து புரம் எரித்த
இறைவன் கோயில் இது என்கின்றது. பார் - பூமி.
நலிந்து - வருத்தி. வார் - கச்சு. சூளிகை - உச்சி.
மகளிர் மாளிகையின்மேல் குழந்தைகளைத் தாலாட்ட
அதனைத் தேவர் கேட்டு மகிழும் கழுமலம் என்க.
5. பொ-ரை: ஊர்ந்து செல்லும்
அரவு. ஒளிவிடும் திங்கள், வன்னி, ஊமத்த மலர்,
நீர்வடிவான கங்கை, நகும் வெண்டலை
|