பக்கம் எண் :

 129. திருக்கழுமலம்1193


ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி

மலையென்ன நிலவிநின்ற

கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு

சுதைமாடக் கழுமலமே. 5

1388. தருஞ்சரதந் தந்தருளென் றடிநினைந்து

தழலணைந்து தவங்கள்செய்த

பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார்தோ

ழமையளித்த பெருமான்கோயில்

அரிந்தவய லரவிந்த மதுவுகுப்ப

வதுகுடித்துக் களித்துவாளை

கருஞ்சகட மிளகவளர் கரும்பிரிய

வகம்பாயுங் கழுமலமே. 6

_________________________________________________

ஆகியன சேர்ந்த செஞ்சடையை உடைய சிவபிரான் எழுந்தருளியுள்ள கோயில்; அழகு பொருந்திய வெள்ளி மலைகள் போல விளங்கி நிற்பனவும் மலர்களால் அலங்கரிக்கப்பெற்று அவற்றை மொய்க்கும் கரிய வண்டுகளின் கணங்களால் சூழப்பெற்றுக் கவின்மிகுவனவுமாய வெண்மையான சுதையால் அமைந்த மாட வீடுகள் நிறைந்த கழுமல நகரில் உள்ளது.

கு-ரை: அரவம், மதி, வன்னி, ஊமத்தம், கங்கை, கபாலம் இவை பொருந்திய செஞ்சடையான் கோயில் கழுமலம் என்கின்றது. ஏர் - அழகு.

6. பொ-ரை: மெஞ்ஞானியர்க்குத் தரும் உண்மை ஞானத்தை எங்கட்கும் தந்தருள் என்று திருவடிகளை நினைந்து, தீ நடுவில் நின்று தவம் செய்யும் பெரிய சதுரப்பாடு உடையவர்கட்கும் மழை நீரில் நின்று தவமியற்றுபவர்கட்கும் பெருமை மிக்க தோழமையை வழங்கியருளும் சிவபிரான் உறையும் கோயில்; நெல்லறுவடை செய்த வயலில் முளைத்த தாமரை மலர்கள் தேனைச் சொரிய, அதனைக் குடித்துக் களித்த வாளை மீன்கள் வயற்கரைகளில் நிற்கும் பெரிய வண்டிகள் நிலைபெயரவும் கரும்புகள் ஒடியவும் துள்ளிப்பாயும் கழுமல வளநகரில் உள்ளதாகும்.

கு-ரை: அருளுக என்று அடிநினைந்து, தீ நடுவில் தவஞ்