1389. புவிமுதலைம் பூதமாய்ப்
புலனைந்தாய்
நிலனைந்தாய்க் கரண நான்காய்
அவையவைசேர் பயனுருவா யல்லவுரு
வாய்நின்றா னமருங்கோயில்
தவமுயல்வோர் மலர்பறிப்பத்
தாழவிடு
கொம்புதைப்பக்
கொக்கின்காய்கள்
கவணெறிகற் போற்சுனையிற்
கரைசேரப்
புள்ளிரியுங் கழுமலமே. 7
_________________________________________________
செய்யும் சதுரர்க்கும், தோழமை தந்த
பெருமான் கோயில் இது என்கின்றது. சரதம் - துணிவு.
பீடு - பெருமை. அரிந்தவயல் - அறுத்த வயலிலே.
அரவிந்தம் - தாமரை. வாளைமீன் தாமரைத் தேனைக்
குடித்துப் பெரிய வண்டி இளக, கருப்பங்காடு விலகப்
பாயும் கழுமலம் என்க.
7. பொ-ரை: மண், புனல் முதலிய
பூதங்கள் ஐந்து. சுவை ஒளி முதலிய புலன்கள் ஐந்து.
அவற்றுக்கு இடமாகிய மெய், வாய் முதலிய பொறிகள்
ஐந்து. வாக்கு பாதம் முதலிய செய் கருவிகள் ஐந்து.
மனம் புத்தி முதலிய உட்கருவிகள் நான்கு ஆகிய ஆன்ம
தத்துவங்களாகவும் அவற்றின் பயனாகவும்,
உருவமாகவும் அருவமாகவும் நிற்கின்ற சிவபிரான்
எழுந்தருளிய கோயில், தவம் செய்ய முயல்வோர்
இறைவனை அருச்சிக்க மரங்களில் பூத்த மலர்களைப்
பறித்துக் கொண்டு விடுத்த கொம்புகள் நிமிர்ந்து
தாக்குதலால் மாமரத்தில் காய்த்த காய்கள்
விண்டு கவணிலிருந்து வீசப்பட்ட கல்போல
சுனைகளில் வீழ ஆங்குறைந்த பறவைகள் அஞ்சி அகலும்
வளமான கழுமல வளநகரில் உள்ளதாகும்.
கு-ரை: ஐம்பூதமாய், ஐம்புலனாய்,
ஐம்பொறியாய், நாற்கரணமாய், அவற்றின்பயனாய்,
உருவாய், அருவாய் நின்றான் அமரும் கோயில் இது
என்கின்றது. நிலன் ஐந்து - புலன்கள் தோன்றுதற்கு
இடமாய ஐம்பொறிகள். கரணம் நான்கு - மனம், புத்தி,
சித்தம், அகங்காரம் என்பன. அவை அவை சேர்பயன்
உருவாய் - பூத முதலியவற்றைச் சேர்ந்தபயனே
வடிவாய்; என்றது பூதப்பயனாய சுவை முதலியதன்
மாத்திரை ஐந்தும், புலனைந்தின் பயனாய
பொறியின்பம் ஐந்தும், நிலனைந்தின் பயனாய
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்ற
ஒழுக்கம் ஐந்தும், கரணம் நான்கின் பயனாய
நினைத்தலும் புத்தி பண்ணலும் சிந்தித்தலும் இது
செய்வேன் என அகங்கரித்து எழுதலுமாகிய நான்கும்
கொள்ளப்பெறும். அல்ல
|