பக்கம் எண் :

 129. திருக்கழுமலம்1195


1390. அடல்வந்த வானவரை யழித்துலகு

தெழித்துழலு மரக்கர்கோமான்

மிடல்வந்த விருபதுதோ ணெரியவிரற்

பணிகொண்டோன் மேவுங்கோயில்

நடவந்த வுழவரிது நடவொணா

வகைபரலாய்த் தென்றுதுன்று

கடல்வந்த சங்கீன்ற முத்துவயற்

கரைகுவிக்குங் கழுமலமே. 8

1391. பூமகள்தன் கோனயனும் புள்ளினொடு

கேழலுரு வாகிப்புக்கிட்

டாமளவுஞ் சென்றுமுடி யடிகாணா

வகைநின்றா னமருங்கோயில்

__________________________________________________

வுருவாய் - இவையல்லாத அருவாய ஞானமாய். பூப்பறிப்போர் விட்ட பூங்கொம்புகள் சென்று தாக்க மாங்காய்கள் கவண்கல்லைப் போலச் சுனைக் கரையில் விழப் பறவைகள் அஞ்சியகலும் நகர் என்க.

8. பொ-ரை: வலிமை பொருந்திய தேவர்கள் பலரை அழித்து உலகை அச்சுறுத்தித் திரிந்த அரக்கர் தலைவனாகிய இராவணனின் வலிமைமிக்க இருபது தோள்களையும் கால் விரலால் நெரிய ஊன்றி அவனைப் பணிகொண்ட சிவபிரான் எழுந்தருளியுள்ள கோயிலை உடையது, நாற்று நடவந்த உழவர்கள் இவை நாற்று நடுவதற்கு இடையூறாய்ப் பரற்கற்கள் போலத் தோன்றுகின்றனவே என்று கூறுமாறு கடலின்கண் இருந்துவந்த சங்குகள் முத்துக்களை வயல்களில் ஈன்று குவிக்கும் கழுமலமாகும்.

கு-ரை: தேவர்களை அழித்து உலகை வருத்தி உழலும் இராவணனது இருபது தோள்களும் நெரிய விரலூன்றிய சிவபெருமான் உறையுங் கோயில் நாற்று நடவந்த உழவர்கள் பருக்கைக் கல்லாக இருக்கிறதென்று எண்ணி முத்துக்களை வரப்பில் குவிக்கும் கழுமலம் என்கின்றது. அடல் - வலிமையோடு. ஒழித்து - கொன்று. மிடல் - வலிமை. பரல் ஆய்த்து - பருக்கைக் கல்லாயிற்று. துன்று - நெருங்கிய. இது நெய்தலோடு தழீஇய மருதம் என்பதை விளக்கிற்று.

9. பொ-ரை: திருமகளின் கேள்வனாகிய திருமாலும், நான்முகனும் பன்றி உருவம் எடுத்தும், அன்னப்பறவை வடிவ மெடுத்தும்,