1396. கங்காளர் கயிலாய மலையாளர்
கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர்
விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழினுழைந்து கூர்வாயா
லிறகுலர்த்திக் கூதனீங்கிச்
செங்கானல் வெண்குருகு பைங்கான
லிரைதேருந் திருவையாறே. 3
1397. ஊன்பாயு முடைதலைகொண் டூருரின்
பலிக்குழல்வா ருமையாள்பங்கர்
தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார்
தழலுருவர் தங்குங்கோயில்
_________________________________________________
3. பொ-ரை: சிறந்த பிரமன்,
திருமால் ஆகியோரின் முழு எலும்புக்கூட்டை
அணிந்தவரும், கயிலாய மலையில் உறைபவரும்,
கானப்பேர் என்னும் தலத்தில் எழுந்தருளியவரும்,
மங்கை பங்கரும் முத்தலைச் சூலப்படை ஏந்தியவரும்,
விடை ஊர்தியை உடையவரும் ஆகிய சிவபிரானார்
எழுந்தருளிய கோயிலை உடையது, சிவந்த
கால்களையுடைய வெண்ணிறக் குருகுகள் தேன் நிறைந்த
சோலைகளில் நுழைந்து கூரிய தம் அலகுகளால் தம்
இறகுகளைக் கோதிக் குளிர் நீங்கிப் பசுமையான
சோலைகளில் தமக்கு வேண்டும் இரைகளைத் தேடும்
திருவையாறாகும்.
கு-ரை: கங்காளர் மங்கைபங்காளர்
பயிலுங் கோயில், வெண்குருகு பொழிலில் நுழைந்து
அலகால் சிறகைக் கோதி, உலர்த்தி, குளிர்நீங்கி
இரைதேடும் ஐயாறு என்கின்றது. கொங்கு ஆள்
அப்பொழில் - தேன் நிறைந்த அச்சோலை. கூதல் -
குளிர். செங்கால் நல் வெண் குருகு எனப் பிரிக்க.
கானல் - கடற்கரைச் சோலை. இது திணைமயக்கம்
கூறியது.
4. பொ-ரை: புலால்
பொருந்தியதாய், முடைநாற்றமுடைத்தாய் உள்ள
தலையோட்டைக் கையில் ஏந்தி, ஊர்கள்தோறும்
பலியேற்று உழல்பவரும், உமை பாகரும், பாய்ந்து
செல்லும் விடையேற்றை உடையவரும், நன்மைகளைச்
செய்வதால் சங்கரன் என்ற பெயரை உடையவரும், தழல்
உருவினருமாகிய சிவபிரான் எழுந்தருளிய
கோயிலையுடையது, மான் துள்ளித் திரிய, வயலருகே
உள்ள
|