1421. அகனமர்ந்த வன்பினரா யறுபகைசெற்
றைம்புலனு மடக்கிஞானம்
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத்
துள்ளிருக்கும் புராணர்கோயில்
தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க்
கந்திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட
மணஞ்செய்யு மிழலையாமே. 6
1422. ஆறாடு சடைமுடிய னனலாடு
மலர்க்கைய னிமயப்பாவை
கூறாடு திருவுருவன் கூத்தாடுங்
குணமுடையோன் குளிருங்கோயில்
_________________________________________________
6. பொ-ரை: உள்ளத்தில்
பொருந்திய அன்புடையவராய், காமம் முதலிய
அறுபகைகளையும் கடிந்து, சுவை ஒளி முதலிய ஐம்புலங்களை
அடக்கிச் சிவஞானத்தில்
திளைத்திருப்பவர்களாகிய துறவிகளின் இதயத்
தாமரையில் எழுந்தருளி விளங்கும் பழையோனாகிய
சிவபிரான் உறையும் கோயில், மணிகளும்
சங்கினங்களும் விளங்கும் தூயதான நீர் நிலைகளில்
முளைத்த தாமரை மலராகிய தீயில் மிகுதியாக
வளர்ந்த புன்க மரங்கள் பொரி போல
மலர்களைத்தூவி, திருமண நிகழ்ச்சியை
நினைவுறுத்திக் கொண்டிருப்பதாகிய
திருவீழிமிழலையாகும்.
கு-ரை: உள்ளன்புடையாராக
அரிஷட்வர்க்கங்களை அழித்து. ஐம்புலன்களையும்
அடக்கிய சிவஞானச் சேர்க்கையுடையோர்களின்
இதயத் தாமரையில் எழுந்தருளியிருக்கும் இறைவன்
கோயில் அழகிய இடத்தில். சங்குகளாகிற
சுற்றம்விளங்க தாமரையாகிய தீயில் புன்கம்
பொரிதூவி மணங்களைச் செய்யும்மிழலை என்கின்றது.
உள்ளப் புண்டரிகம் - இதயதாமரை. தகவு - தகுதி. நீர்
மணித்தலத்து - நீரோட்டத்தோடு கூடிய
இரத்தினங்கள் அழுத்தப்பெற்ற இடத்து. சங்கு
உளவர்க்கம் திகழ - சங்குகளாகிய உள்ளசுற்றம்
விளங்க. சலசத்தீயில் - தாமரைப் பூவாகிய தீயில்.
மலர்ந்த தாமரையைத் தீக்கு ஒப்பிடுவது மரபு.
7. பொ-ரை: கங்கையணிந்த சடைமுடியை
உடையவனும், மலர் போன்ற கரத்தில் அனலை
ஏந்தியவனும், இமவான் மகளாகிய
|