1425. எண்ணிறந்த வமணர்களு மிழிதொழில்சேர்
சாக்கியரு மென்றுந்தன்னை
நண்ணரிய வகைமயக்கித் தன்னடியார்க்
கருள்புரிய நாதன்கோயில்
பண்ணமரு மென்மொழியார் பாலகரைப்
பாராட்டு மோசைகேட்டு
விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோ
டும்மிழியும் மிழலையாமே. 10
1426. மின்னியலு மணிமாட மிடைவீழி
மிழலையான் விரையார்பாதம்
சென்னிமிசைக் கொண்டொழுகுஞ் சிரபுரக்கோன்
செழுமறைகள் பயிலுநாவன்
பன்னியசீர் மிகுஞான சம்பந்தன்
பரிந்துரைத்த பத்துமேத்தி
இன்னிசையாற் பாடவல்லா ரிருநிலத்தி
லீசனெனு மியல்பினோரே. 11
திருச்சிற்றம்பலம்
_________________________________________________
10. பொ-ரை: எண்ணற்ற சமணர்களும்,
இழிதொழில் புரியும் சாக்கியர்களும்,
எக்காலத்தும் தன்னை நெருங்க இயலாதவாறு அவர்கள்
அறிவை மயக்கித் தன் அடியவர்களுக்கு அருள் புரியும்
சிவபிரான் எழுந்தருளிய கோயில், பண்ணிசை
போலும் மென்மொழி பேசும் மகளிர் தாங்கள்
பெற்ற புதல்வர்களைப் பாராட்டும் தாலாட்டு ஓசை
கேட்டு வியந்து, தேவர்கள் விமானங்களோடு வந்து
இறங்கும் திருவீழிமிழலையாகும்.
கு-ரை: புத்தரும் சமணரும் தம்மை
அறியாவகையாக அவர்களை மயக்கித் தன் அடியார்க்கு
அருள்புரியும் நாதன்கோயில், பண்மொழிப்
பாவைமார்கள் பாலகரைப் பாராட்டும் ஓசை கேட்டு
விண்ணவர்கள் விமானத்தோடு வந்திறங்கும்
வீழிமிழலை என்கின்றது.
11. பொ-ரை: மின்னல் போலும்
ஒளியுடைய மணிகள் இழைத்த மாட வீடுகள் செறிந்த
திருவீழிமிழலை இறைவனின் மணம் கமழ்கின்ற
|